For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் இணைய முடக்கத்தை நீக்க பரிசீலிக்கவும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. அரசுக்கு குட்டு!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், 144 தடை உத்தரவிற்கு கீழ் அரசு பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், இது தொடர்பாக 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும், 144 தடை உத்தரவிற்கு கீழ் அரசு பிறப்பித்த உத்தரவுகள் என்ன என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் அரசு சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது.

அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. அங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் உமர் அப்துல்லா உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

SC will deliver the verdict on today on pleas challenging curbs in Kashmir

மேலும் இணைய பயன்பாட்டுக்கு தடை, செல்போன் சேவைகள் துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவுகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டன. செய்திதாள்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் வழக்குகள் தொடர்ந்தனர்.

அதேபோல் இந்த வழக்கில் பொதுநல வழக்கும் சில தொடுக்கப்பட்டது. இவ்வழக்குகளை நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் கடந்த ஆண்டு நவம்பர் 27-ல் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாட்டிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,

  • இங்கு நாங்கள் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை.காஷ்மீர் பல கலவரங்களை, தாக்குதல்களை சந்தித்துள்ளது.
  • தனி நபர் சுதந்திரமும், தேசிய பாதுகாப்பும் மிக முக்கியமானது.இணையம் என்பது கருத்துரிமை.
  • இணையத்தில் கருத்து கூறுவது மனிதனின் அடிப்படை உரிமை. கருத்துரிமை என்பது சட்டப்பிரிவு 14க்கு கீழ் வருகிறது.
  • முதலில் காஷ்மீரில் சூழல் எப்படி என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.எந்த வழியும் இல்லை என்றால் மட்டும்தான் இதை தடுக்கலாம்.
  • காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகள் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும்.மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளை வெளியிட வேண்டும்.
  • 144 தடைக்கு கீழே அரசு பிறப்பித்த அனைத்து உத்தரவையும் வெளியிட வேண்டும்.144 தடை உத்தரவை எல்லா நேரமும் பயன்படுத்த கூடாது.
  • அரசுக்கு எதிராக யாரவது பேசினாலே அங்கு 144 பயன்படுத்துவது தவறு.நீண்ட கலாத்திற்கு இகாஷ்மீரில் இணையத்தை நிறுத்தி வைத்துள்ளீர்கள்.
  • குறிப்பிட்ட தேதியை குறிப்பிடாமல் இணையத்தை தடை செய்வது விதிக்கு எதிரானது.
  • காஷ்மீரில் இணையத்தை அளிக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • இது தொடர்பாக 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும். உடனே இணைய முடக்கத்தை நீக்குவது குறித்து ஆலோசனை வேண்டும்.
  • இணைய வங்கி சேவையை பயன்படுத்தவும் பரிசீலனை செய்ய வேண்டும்.

இது தொடர்பான அனைத்து உத்தரவையும் ஜம்மு காஷ்மீர் அரசு பரிசீலிக்க வேண்டும். அங்கு உள்ள இணைய சேவை தடை குறித்து ஆய்வு குழு எல்லா வாரமும் ஆய்வு செய்ய வேண்டும்.

English summary
Supreme Court to deliver the verdict on today on pleas challenging curbs in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X