For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் காங்கிரஸ் சட்டசபை அலுவலகம் முன்பு 'ஜெய் தெலங்கானா' கோஷமிட்ட கான்ஸ்டபிள் கைது

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே கோஷமிட்ட கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தெலுங்கானா விவகாரத்தால் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

கான்ஸ்டபிள்

கான்ஸ்டபிள்

தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் சட்டசபை கட்சி அலுவலகம் முன்பு கான்ஸ்டபிள் சஞ்சீவுலு என்பவர் கோஷமிட்டார்.

சதி

சதி

தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடத்தப்படும் சதி தான் இந்த போராட்டங்கள் என்று சஞ்சீவுலு தெரிவித்தார்.

கைது

கைது

சட்டசபை வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு கோஷமிட்ட சஞ்சீவுலுவை போலீசார் வந்து கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விடுவிப்பு

விடுவிப்பு

கைது செய்யப்பட்ட சஞ்சீவுலுவை உடனே விடுவிக்குமாறு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைமை கொறடா கன்ட்ரா வெங்கட்ரமன ரெட்டி கோரிக்கை விடுத்தார். அவரது தலையீட்டின்பேரில் சஞ்சீவுலு விடுவிக்கப்பட்டார்.

English summary
A police constable was taken into custody after he shouted slogans supporting Telangana before the Congress Legislature Party office in Assembly premises in Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X