For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலில் இந்தியா என்பதே அரசின் மதம்; அரசியலமைப்பு சட்டமே புனித நூல்: லோக்சபாவில் பிரதமர் மோடி பேச்சு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: முதலில் இந்தியா' என்பதே எனது அரசின் மதம், அரசியமைப்புச் சட்டம் புனித நூல் என்று பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக கடந்த இரு நாட்களாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதில் அளித்து பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பேசுகையில், வேற்றுமை நிறைந்த இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்துவது அரசியல் சாசனம்தான். நாட்டின் கெளவுரவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவது அரசியல் சாசனம். ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் நீ, நான் என்ற வேற்றுமையை கடந்து நாம் என்ற அடிப்படையிலேயே இந்த விவாதம் நடக்க வேண்டும்.

Constitution only holy book says PM Modi

முதலில் இந்தியா' என்பதே எனது அரசின் மதம், அரசியமைப்புச் சட்டம் புனித நூல் போன்றது. இந்திய அரசியமைப்புச் சட்டத்தின்படியே நாட்டில் ஆட்சி நடத்தப்படும். நம் நாட்டின் அரசியல் அமைப்பை யாரும் மாற்றமுடியாது. அதன் அடிப்படையிலேயே ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை மாற்ற நினைத்தால் அது தற்கொலைக்கு சமமானது ஆகும். நம் அரசியலமைப்பின் வலிமை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவை.

வேற்றுமை நிறைந்த இந்தியாவுக்கு அரசியலமைப்பை உருவாக்குவது கடினமானதாக இருந்திருக்கும். அம்பேத்கரின் சிந்தனைகளும், கருத்துகளும் அனைத்து தலைமுறைக்கும் ஏற்றவை.

அரசை பற்றி விமர்சிக்க, நடுநிலையாக கருத்து கூற அம்பேத்கரையே பலரும் மேற்கோள் காட்டுகின்றனர். வாழ்நாளில் அம்பேத்கர் அவமானத்தை சந்தித்த போதும் அரசியலமைப்பில் அது பிரதிபலிக்கவில்லை. வாழ்க்கையில் விஷத்தை உட்கொண்டு அமிர்தத்தை அளித்தவர் அம்பேத்கர்.

முந்தைய அரசாங்கள் ஏதும் செய்யவில்லை எனக் கூறமுடியாது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்டமேதை . அம்பேத்கர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டின் வளர்சிக்கு பாடுபட்டுள்ளனர்.

நமது நாட்டில் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். நாம் இதைவிட சிறந்த நிலையில் இருந்திருக்க முடியும். அந்த இளைஞர்களுக்கு தேவைப்படும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 12 மதங்களின் பண்டிகைகள் ஒரே மாதிரியான நல்லெண்ணத்துடன் கொண்டாடப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் 122 முக்கிய மொழிகளும் 1600 வட்டார மெழி பேசும் மக்களும் இருக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
modi says in loksabha, India first’ is the only religion of his government and Constitution is the only holy book
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X