For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரக்கர்களை அழிக்க மறுபிறவி எடுத்த ராமர் கொரோனாவையும் அழிப்பார்... சொல்வது பாஜக மூத்த தலைவர்

அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது பயங்கரமான கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும் என்று பாஜக மூத்த தலைவர் ரமேஸ்வர

Google Oneindia Tamil News

போபால்: பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும் என்று கூறியுள்ளார் மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் சட்டசபை சபாநாயகருமான ராமேஸ்வர் சர்மா.

உலகம் முழுவதும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லாக்டவுன் வேலையிழப்பு என மக்கள் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும்.
என்று பாஜக மூத்த தலைவர் ரமேஸ்வர் சர்மா.

அயோத்தியில் ராமர் கோவில்

அயோத்தியில் ராமர் கோவில்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ராமர் கோவில் பகுதியில் கடந்த மே மாதம் 11ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

பூமி பூஜை எப்போது

பூமி பூஜை எப்போது

கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஜூலை 2ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் பூமி பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அன்று பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனாவை அழிக்கும் ராமர்

கொரோனாவை அழிக்கும் ராமர்

மத்தியப் பிரதேச மாநில சட்டசபை சபாநாயகரும் பாஜக தலைவருமான ராமேஸ்வர் சர்மா குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனைத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் பகவான் ராமர் பிறந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரமான கொரோனா வைரஸின் முடிவின் ஆரம்பமாகும்.

அரக்கர்களை அழித்த ராமர்

அரக்கர்களை அழித்த ராமர்

பகவான் ராமர் மனிதகுலத்தின் நலனுக்காகவும், அப்போது அரக்கர்களை அழிக்கவும் மறுபிறவி எடுத்தார். ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் கொரோனா தொற்று நோய்களின் அழிவும் தொடங்கும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது

உலகமே கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நிகழ்ச்சியின் போது அனைத்து சமூக இடைவெளி விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும், இந்த விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ரமேஸ்வர் சர்மா.

English summary
Madhya Pradesh Assembly Protem Speaker Rameshwar Sharma said, The construction of the Ram temple in Ayodhya will bring an end to the coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X