For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்... மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு!

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 1300 பக்தர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது.

பலத்த மழை காரணமாக நேபாளத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

104 இந்தியர்கள் மீட்பு

104 இந்தியர்கள் மீட்பு

யாத்திரை சென்ற பக்தர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். நேபாளத்தில் சிக்கித் தவித்த இந்திய யாத்ரீகர்களில் முதல் கட்டமாக 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழர் ஒருவரும் பலி

தமிழர் ஒருவரும் பலி

கடுங்குளிர் தாளாமல் ஏற்கெனவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசந்திரன் உயிரிழந்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

கட்டுப்பாட்டு அறை திறப்பு

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் குறித்து தகவல் தர டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

உதவி உண்கள் அறிவிப்பு

உதவி உண்கள் அறிவிப்பு

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தகவல் அளிக்க 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர் பாண்டியன் 9868560077, கண்ணதாசன் முத்துபாட்ஷா 9968219303 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விரைவு

அதிகாரிகள் விரைவு

ராணி மற்றும் பவித்ரா 011-21610285 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள நேபாளத் தூதரகத்தை தொடர்புகொண்டு தமிழர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழர்களை மீட்க இரண்டு அதிகாரிகள் நேபாளம் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Control room has opened in Delhi to rescue Tamil pilgrims from Mansarovar at Nepal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X