For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துவாரகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் யார்? வெடிக்கும் புதிய சர்ச்சை

துவாரகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் யார் என்பதில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஹரித்துவார் சாது அச்யுதானந்தா தாமே துவாரகை சாரதா பீட சங்கராச்சாரியார் என கலகக் குரல் எழுப்பியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

ஹரித்வார்: துவாராகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்தாவுக்கு பதில் இனி தாமே புதிய சங்கராச்சாரியார் தாமே என சுவாமி அச்யுதானந்தா போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஆதி சங்கரரால் சிருங்கேரி, பூரி, துவாரகை, உத்தரகாண்ட் ஆகிய 4 இடங்களில் மடங்கள் நிறுவப்பட்டன. இந்த மடங்களின் தலைவர்கள்தான் சங்கராச்சாரியார்களாக அழைக்கப்படுகின்றனர்.

Controversy erupts over Dwarka shankaracharya

தமிழகத்து காஞ்சி மடம், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது அல்ல. ஆனாலும் காஞ்சி மடாதிபதிகள் தங்களை சங்கராச்சாரியார்கள் என அழைத்துக் கொள்கின்றனர். இதேபோல் ஆதி சங்கரரால் நிறுவப்படாத 50க்கும் மேற்பட்ட மடங்களின் தலைவர்கள் தங்களை சங்கராச்சாரியார்கள் என அழைத்துக் கொள்கின்றனர்.

தற்போது துவராகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் யார் என சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சாரதா பீடத்துக்கு தாமே சங்கரச்சாரியார் என ஹரித்துவாரைச் சேர்ந்த சுவாமி அச்யுதானந்தா கலகக் குரல் எழுப்பியுள்ளார்.

மேலும் தற்போதைய சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்தாவை நீக்குவதாகவும் அச்யுதானந்தா கூறியுள்ளார். ஆனால் சுவாமி ஸ்வரூபானந்தாவோ அச்யுதானந்தாவை ஏற்க கூடாது என சங்கராச்சாரியார்களை நியமிக்கும் காசி வித்வத்பரிஷத்திடம் முறையிட்டுள்ளார் ஸ்வரூபானந்தா. அத்துடன் அச்யுதானந்தாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்வரூபானந்தா கூறியுள்ளார்.

ஏற்கனவே தாமே துவாரகை சாரதா பீடத்தின் சங்கராச்சாரி சுவாமி ராஜராஜேஸ்வரஸ்ராம் கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Haridwar sadhu Swami Achyutananda who anointed himself as shankaracharya of the Dwarka Sharda peeth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X