For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பி.ஐ.ஓ கார்டுகளை ஓ.சி.ஐ.க்கு மாற்ற ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பி.ஐ.ஓ கார்டுகளை (Person of Indian Origin) ஓ.சி.ஐ. கார்டுகளாக (Overseas Citizenship of India) மாற்றுவதற்கான கால அவகாசம் ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனுக்காக பி.ஐ.ஓ. கார்டுகள் திட்டம் 2002ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்குள் பயணம் மேற்கொள்ள, பணிபுரிய, வசிக்க டியும். இது 15 ஆண்டுகாலம் செல்லத்தக்கது.

இதன் பின்னர் 2005ஆம் ஆண்டு ஓ.சி.ஐ. கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய பி.ஐ.ஓ. கார்டுகளை அதிக பலன்களைக் கொண்டது. குறிப்பாக வாழ்நாள் முழுவதும் இந்த கார்டு செல்லத்தக்கது.

இருப்பினும் 2014-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்காக மத்திய அரசு இந்த இரண்டு கார்டுகள் வழங்கும் திட்டத்தையும் ஒருங்கிணைக்க முடிவு செய்தது. இதற்காக விண்ணப்பிக்க மார்ச் 31-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Government extended the last date for applying for conversion of PIO cards to OCI cards to June 30 from March 31.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பி.ஐ.ஓ கார்டுகளை (Person of Indian Origin) ஓ.சி.ஐ. கார்டுகளாக (Overseas Citizenship of India) மாற்றுவதற்கான கால அவகாசம் ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

English summary
Government extended the last date for applying for conversion of PIO cards to OCI cards to June 30 from March 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X