For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா விபரீதம்: ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

அறந்தாங்கி: கொரோனா மனித சமூகத்தில் உயிரிழப்புகளையும் பொருளாதார தாக்கத்தையும் மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. கொரோனாவால் பல விந்தைகளும் விபரீதங்களும் கூட அரங்கேறும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Recommended Video

    ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ
    Corona Lockdown: Two vidoes go to viral in Social Media

    கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை லாக்டவுன் வாழ்க்கை முறையை அனுபவிக்காத நம்மவர்கள் வழக்கம்போல வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுகின்றனர்.

    இந்த ஆர்வக்கோளாறுகளை கட்டுப்படுத்துவதற்குள் போலீசாருக்கு பெரும்பாடாகிவிடுகிறது. இப்படியான ஒருவர் அறந்தாங்கியில் போலீசாருடன் படுபயங்கரமாக மல்லுக்கட்டியிருக்கிறார்.

    இது தொடர்பான வீடியோவில், கொரோனா இருந்தா ஏன் வெளியே வரக் கூடாது? உங்களுக்கு கொரோனா வந்தா என்ன பண்ணுவீங்க? என இளைஞர் ஒருவர் போலீசாரிடம் கேள்வி கேட்கிறார். இதற்கு பதிலளித்த பெண் போலீசார் ஒருவர், இதை போய் சி.எம்மிடம் கேளு என்கிறார். அவ்வளவுதான் அந்த இளைஞர் உக்கிரதாண்டவமாகிறார். சிஎம்மை இங்க வரசொல்லுங்க..இது என்ஊர் என் கோட்டை.. என்று பேசியதுடன் அரசியல் தத்துவங்களையும் கொட்டிவிடுகிறார்.

    மற்றொரு வீடியோவில், போலீஸ் ஸ்டேஷனில் மண்டி போட்ட நிலையில் இருக்கிறார் அதே இளைஞர்.. போலீசாரிடம் விவாதம் செய்த அந்த இளைஞர்தான் அவர். லத்தியால் போலீசார் அந்த இளைஞரை அடிப்பதும் தாம் பாதுகாப்பாக இனி மேல் இருக்கிறேன்; வெளியே வரமாட்டேன் என்றும் வலியுடன் அந்த இளைஞர் கதறுவதுமாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த வீடியோக்கள் இரண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    English summary
    Two videos went to viral in social medias related to Coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X