For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலையில் பரவும் கொரோனா - ஊழியர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

பரிமலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சபரிமலை: கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று கேரளா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், அர்ச்சகர்கள் மற்றும் ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்த தேவசம் போர்டு, மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.

Corona spreading in Sabarimala - Additional control for employees

ஜனவரி 14ஆம் தேதியன்று 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

சபரிமலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்கு பணியாற்றுபவர்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், அர்ச்சகர்கள் மற்றும் ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவ்வப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த அனைவருக்கும் இலவசமாகவும், மற்ற மாநில தொழிலாளர்களுக்கு ரூ. 625 கட்டணத்திலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

English summary
The Kerala Health Department has announced that those who do not have a negative certificate of no corona will be immediately released from Sabarimala work. Government employees on duty in Sabarimala, Pompeii and Nilakkal, police on security duty, priests and hotels, workers in companies, cleaners are all advised to undergo a corona medical examination every 14 days and keep the certificate safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X