For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கிட்ட வராதீங்க.. எனக்கு "கொரோனா" இருக்கு.. அலறி ஓடிய விவசாயி.. மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

கொரோனா இருப்பதாக நினைத்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனா பயம்.. தற்கொலை செய்துகொண்ட விவசாயி

    சித்தூர்: "என் கிட்ட வராதீங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று அலறி ஓடியுள்ளார் பாலகிருஷ்ணையா.. நெருங்கி சென்றவர்கள் மீது கல்லை தூக்கி எறிந்துவிட்டு, தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் சித்தூரில் நடந்துள்ளது.!

    கொரோனா வைரஸ், உலகையே மிரட்டி வைத்து வருகிறது... இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், இந்த வைரஸ் மீதான பீதி அதிகமாகி கொண்டே போகிறது. இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தற்கொலை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சித்தூரை அடுத்துள்ள பகுதி தொட்டம்பேடு.. இங்கு வசித்து வந்தவர்தான் பாலகிருஷ்ணையா.. 54 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி... பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து இவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது... அதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.. நிறைய செக்அப்கள் செய்யப்பட்டன.

    "வண்டியை ஓரங்கட்டிட்டு அப்படியே சீட்டுல சாய்ஞ்சுட்டாரு.. ஆட்டோ மாமா.." கதறிய ஸ்கூல் பிள்ளைகள்!

    மாஸ்க்

    மாஸ்க்

    சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது.. அதனால் காய்ச்சலும் இருந்துள்ளது.. இந்த விவரத்தை பால கிருஷ்ணையாவிடம் சொன்ன டாக்டர்கள், அதற்கான மருந்துகளையும் தந்தனர்.. பொதுவாக எந்த தொற்று ஏற்பட்டாலும், மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்துவது வழக்கம்.. அதனால் பாலகிருஷ்ணையாவுக்கு மேலும் நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க மாஸ்க் அணிந்து கொள்ள சொல்லி உள்ளனர்.

    அச்சம்

    அச்சம்

    ஆஸ்பத்திரியில் இருந்து அப்படியே திருப்பதியில் உள்ள தன் தங்கை வீட்டுக்கு சென்றார்.. அங்குதான் கொரோனா வைரஸ் பற்றின செய்திகள், உயிரிழப்புகள் போன்றவை குறித்து டிவி, நியூஸ் பேப்பர்களை பார்த்து அதிர்ந்தார்... அதனால் தனக்கும் கொரோனா வந்துவிட்டதாக பயந்துவிட்டார்.. அதனால் குடும்பத்தினர் யாரையுமே தன்னிடம் வர வேண்டாம் என்று எண்ணினார். வீட்டில் யாரையுமே பார்க்க மறுத்தார்.

    கிட்ட வராதீங்க

    கிட்ட வராதீங்க

    குடும்பத்தினர் கொரோனா பற்றி எடுத்து சொல்லியும் அதை அவர் கேட்கவே இல்லையாம்.. அருகில் சென்றாலே, கல்லை எடுத்து அவர்களை அடித்து விரட்டி உள்ளார்.. "கிட்ட வராதீங்க.. பரவிடும்.." என்று கூச்சலிட்டுள்ளார். தன்னை பார்க்கும் மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும் என்பதால், தவித்தபடியே இருந்தார். குடும்பத்தினரை காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு, இரவு நேரத்தில் வீட்டு பக்கத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தவறான புரிதல்

    தவறான புரிதல்

    விடிந்ததும்தான் மரத்தில் பாலகிருஷ்ணையாவின் சடலம் தொங்கியதை கண்டு அலறி துடித்தனர்... இது சம்பந்தமான போலீசார் விசாரணை நடந்து வருகிறது. தந்தையின் மரணம் குறித்து அவரது மகன் சொல்லும்போது,"இது ஒரு வகையான தொற்று, கவனமாக இருங்கள் என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. இதைதான் அப்பா தவறாக புரிந்து கொண்டார்.. மேலும் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லவும் இன்னும் பயந்துவிட்டார்... நாங்கள் இந்த வைரஸ் பற்றி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அப்பா புரிந்து கொள்ளவில்லை.

    கண்ணீர்

    கண்ணீர்

    கொரோனா சம்பந்தமான நிறைய வீடியோக்களையும் அவர் பார்த்தார்.. அதனால் ஆழமாக நம்பிவிட்டார்... அப்பாவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவருக்கு உதவ நான் 1100, 108, 100 என்ற நம்பர்களுக்கு போன் செய்தேன்.. ஆனால் அவர்கள் யாரும் சரியான பதில் தரவில்லை... எதிர்காலத்தில், தயவுசெய்து பதிலளித்து விழிப்புணர்வை பரப்புங்கள்... எங்களை காப்பாற்றுவதாக நினைத்து கொண்டு அநியாயமாக இறந்துவிட்டார்..." என்று கண்ணீர் விட்டார்!

    English summary
    andhra farmer thinks he has coronavirus and he commits suicide for save family
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X