For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெறும் 1 வயது.. குஜராத்தில் கொரோனாவிற்கு குழந்தை பலி.. எப்படி வந்தது? மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

குஜராத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வெறும் ஒரு வயது நிரம்பிய குழந்தை பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வெறும் ஒரு வயது நிரம்பிய குழந்தை பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    வந்துவிட்டது அதிவேக கொரோனா பரிசோதனை

    கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 124 பேர் பலியாகி உள்ளனர். அரசு அளித்து இருக்கும் விவரங்களின் படி, இந்தியா முழுக்க 4785 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் மிக மோசமாக 1018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 68 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில்தான் கொரோனா காரணமாக குஜராத்தில் ஏற்பட்ட மரணம் ஒன்று இந்தியாவையே உலுக்கி உள்ளது. குஜராத்தில் இன்று அதிகாலை 14 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று கொரோனா காரணமாக பலியானது.

    கொரோனா.. 2 மணி நேரத்தில் மாறுகிறது.. திடீரென பலியாகிறார்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி தந்த 3 மரணங்கள்!கொரோனா.. 2 மணி நேரத்தில் மாறுகிறது.. திடீரென பலியாகிறார்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி தந்த 3 மரணங்கள்!

    கொரோனா

    கொரோனா

    குஜராத் ஜாம்நகர் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைக்கு கடந்த 5ம் தேதி கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் பெற்றோர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இதற்கு முன் வெளிநாடு எங்கும் சென்றது இல்லை. உத்தர பிரதேசத்தில் இருந்து தொழில் நிமித்தமாக குஜராத் வந்து தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அந்த குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    ஜாம்நகர் ஒரே நபர்

    ஜாம்நகர் ஒரே நபர்

    குஜராத் ஜாம்நகரில் அந்த குழந்தைக்கு மட்டும்தான் கொரோனா ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் பெற்றோருக்கும் கூட கொரோனா அறிகுறிகள் இல்லை. இதனால் அந்த குழந்தைக்கு எப்படி கொரோனா வந்து இருக்கும். யார் மூலம் கொரோனா பரவி இருக்கும் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது. எப்படி இவருக்கு கொரோனா தாக்கியது என்பது புரியாத புதிராக உள்ளது.

    பலியானார்

    பலியானார்

    இந்த நிலையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை கொரோனா காரணமாக இன்று அதிகாலை பலியானது. உடல் உறுப்புகள் பல செயல் இழந்த காரணத்தால் அந்த குழந்தை பலியானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்தே குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்துள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன்தான் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். குஜராத்தில் கொரோனா காரணமாக பலியான முதல் குழந்தை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிக மோசமான நிலை

    மிக மோசமான நிலை

    இந்தியாவில் 124 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில்தான் 64 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அதே சமயம் இந்தியாவில் குஜராத்தான் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால் குஜராத்தில்தான் இந்தியாவில் மிக மோசமான இறப்பு சதவிகிதம் உள்ளது. இந்தியாவில் இத்தாலிக்கு இணையான இறப்பு விகிதம் கொண்ட ஒரே மாநிலம் குஜராத்தான்.

    குஜராத் நிலை என்ன

    குஜராத் நிலை என்ன

    குஜராத்தில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 136 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 25 பேர் வீடு திரும்பி உள்ளனர். அங்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். அதாவது அங்கு கொரோனா பாதித்த 10ல் ஒருவர் பலியாகிறார். அதாவது குஜராத்தில் இறப்பு விகிதம் 10% ஆக உள்ளது. இந்தியாவில் இதுதான் மோசமான இறப்பு சதவிகிதம் ஆகும். மத்திய பிரதேசம் 8%த்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.மத்திய பிரதேசத்தில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 21 பேர் பலியாகி உள்ளனர்.

    English summary
    Coronavirus: 1-year-old toddler succumb to death in Gujarat early today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X