For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. யார் அனுமதி கொடுத்தது?.. வலுக்கும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

இந்தூர்: கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்யும் பொருட்டு சோதனை அடிப்படையில் ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து ஆய்வு செய்ய பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    கொரோனா வைரசுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. வலுக்கும் எதிர்ப்பு

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை எதிர்க்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆங்கில மருந்துகள், சித்த மருந்துகள், ஆயுர்வேதம் என எந்த துறை மருந்துகளானாலும் அவை மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகளை வைத்தே அனுமதி அளிக்கப்படுகின்றன.

    Coronavirus cures in Ayurveda? Baba Ramdevs patanjali erupts political row

    இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து அவர்களது நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக ஆட்சியர் அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நாட்டு மக்களை கினியா பன்றிகளை போல் நடத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் ஜுன் 1 முதல் பேருந்துகள், கோயில்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? பரபர தகவல் தமிழகத்தில் ஜுன் 1 முதல் பேருந்துகள், கோயில்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? பரபர தகவல்

    பதஞ்சலி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். எந்த மருந்தாக இருந்தாலும் இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி பெற்றே மனிதர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.

    இதுகுறித்து மத்திய பிரதேச அரசை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது அது போல் பதஞ்சலி நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியும் தரவில்லை என்றது. இதையடுத்து இந்தூர் ஆட்சியரிடம் பேசினேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் திக்விஜய சிங்.

    English summary
    Coronavirus cures in Ayurveda? Baba Ramdev's Patanjaji has erupted Political row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X