For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. இந்தியாவில் கொரோனாவால் பலி 9 ஆனது

கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இமாச்சல் பிரதேசத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்

    கொரோனா வைரஸ்.. இந்தியாவில் இந்த மோசமான வைரஸ் இப்போதுதான் வேகம் எடுத்துள்ளது. 424 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் இதுவரை 24 பேர் கொரோனா வைரஸ் தாக்கி குணம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகமாக 89 பேரும் கேரளாவில் அதிகமாக 67 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொல்கத்தா மரணம்

    கொல்கத்தா மரணம்

    கொரோனா பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட இவர் கொல்கத்தாவில் தம் தம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரம் முன் 55 வயது நிரம்பிய இவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொல்கத்தாவில் கொரோனா பாதித்த இரண்டாவது நபர், இவர்தான். இவருக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாரடைப்பு ஏற்பட்ட நபர்

    மாரடைப்பு ஏற்பட்ட நபர்

    ஆனால் இவருக்கு ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ஒரு முறை மாரடைப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு சிகிச்சை அளிப்பதில் கொஞ்சம் சிரமம் காணப்பட்டது. இவர் மூச்சு விடுவதிலும் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. கொரோனா வைரஸ் வந்தால் இதயம் அடைக்கும், மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று இவருக்கு உடல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது.

    மீண்டும் மாரடைப்பு வந்தது

    மீண்டும் மாரடைப்பு வந்தது

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு இன்று காலையில் மாரடைப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக திடீர் என்று மூச்சடைப்பு ஏற்பட்ட இவர் மாரடைப்பால் துடித்து போனார். ஆனால் இவருக்கு கொடுக்கப்பட்ட அவசர சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் இவர் பலியானார். இதனால் கொரோனாவால் முதல் நபர் மேற்கு வங்கத்தில் பலியாகி உள்ளார்.

    அடுத்த பலி

    அடுத்த பலி

    அதேபோல் கொரோனவால் இமாச்சல் பிரதேசத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் 69வயது திபெத் நபர் கொரோனாவால் பலியாகி உள்ளார். இவர் மார்ச் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை இவர் பலியானார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    இன்று காலை மும்பையில் வசித்து வந்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபர் பலியானார். கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முதல் நாள் குணமாகி வீட்டிற்கு திரும்பினார். ஆனால் வீட்டிற்கு திரும்பி ஒரே நாளில் மூச்சு விட முடியாமல் அவர் பலியானார். அவரையும் சேர்த்தால் இந்தியாவில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

    English summary
    Coronavirus: First death in Kolkata, West Bengal due to pandemic, So far 8 dead in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X