For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் இருந்து 2,800 கிமீ தொலைவு.. 25 நாட்கள் நடந்தே உயிருடன் வந்து சேர்ந்த அஸ்ஸாம் தொழிலாளி

Google Oneindia Tamil News

குவஹாத்தி: கொரோனாவை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமுக்கு சுமார் 2,800 கி.மீ. தொலைவு நடந்தே சென்று குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார் கூலி தொழிலாளி கோகாய்.

குஜராத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தவர் ஜாதவ் கோகாய். அஸ்ஸாமின் நகோன் மாவட்டம் காதாரியா கிராமத்தைச் சேர்ந்தவர்.

Coronavirus Lockdown: Assam Migrant labour reaches home after 2,800 km walk from Gujarat

நாடு முழுவதும் கொரோனாவால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் சொந்த மாநிலமான அஸ்ஸாமுக்கு நடந்தே செல்வது என முடிவெடுத்தார் கோகாய். 2800 கி.மீ தொலைவில் உள்ள நகோனை எப்படியும் நடந்தே சென்றுவிட முடியும் என கோகாய் நம்பினார்.

கையில் ரூ4,000 பணம்... உதவிக்கு செல்போன் இருக்கிறது.. இந்த நம்பிக்கையுடன் நெடுஞ்சாலைகளில் தமது நெடும்பயணத்தை தொடர்ந்தார் கோகாய். விதி வலியது... அவரது கையில் இருந்த பணமும் செல்போனும் வழிப்பறி கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது.

கொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்கொரோனா உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பது தவறானது- ராகுல் காட்டம்

இதனால் வயிற்றுப் பசிக்காக கையேந்தி வயிரை நிரப்பி இருக்கிறார். என்ன ஆனாலும் சரி என மனம் தளராமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒருவழியாக தமது ஊருக்கு அருகே உள்ள டோல்கேட்டை ஞாயிறன்று அடைந்திருக்கிறார் கோகாய். மொத்தம் 25 நாட்கள் நடைபயணம்தான்..

ஜாதவ் கோகாய் பல்வேறு மாநிலங்களைக் கடந்து வந்தவர் என்பதால் அவர் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

English summary
A Assam Migrant labour reached home after 2,800 km walk from Gujarat on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X