For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தாக்குதல்- ஒடிஷாவில் அரசுடனான யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் மாவோயிஸ்டுகள்

Google Oneindia Tamil News

கோராபுட்: கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு படையினருடனான யுத்த நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாவோயிஸ்டுகளின் ஒடிஷா பிரிவு அறிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் குறைந்த குற்றசெயல்கள்

    சத்தீஸ்கரில் அண்மையில் மாவோயிஸ்டுகள் நடத்திய கொடூர தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர் வீர மரணமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் நடத்திய தீவிர தாக்குதல்களில் இதுவும் ஒன்று.

    Coronavirus: Odisha Maoists Announce Ceasefire

    இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் 100க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 2 வாரங்களாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது.

    இதனிடையே மாவோயிஸ்டுகளின் எல்லையோரப் பகுதி பிரிவு, பாதுகாப்புப் படையினருடன் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் ஆடியோ பதிவில், யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.

    இது தொடர்பாக அரசு தரப்பில் 5 நாட்களில் பதில் தர வேண்டும். மேலும் நாடு முழுவதும் லாக் டவுன் அமலாக்கப்பட்டிருப்பதால் ஆதி பழங்குடி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    The CPI (Maoist) have announced a unilateral ceasefire in Odisha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X