For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா மருத்துவமனையில் இருந்து தப்பித்து கோவாவுக்குள் வலம் வரும் மூதாட்டி- விசாரணைக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

பனாஜி: மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த பெண் முறையான கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பியது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநிலங்களில் கோவாவும் ஒன்று. கோவா சுற்றுலாத்தலமாக இருந்த போதும் கடும் கட்டுப்பாடுகள் காரண்மாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது.

Coronavirus Patient Skips Test- Enters Goa

கோவாவில் மொத்தம் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். தற்போது 109 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்தான் மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த மூதாட்டி ஒருவர் கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பி சென்றிருக்கிறார். தமக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் அந்த பெண். இதனையடுத்து அவர் கொரோனா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்

அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தது. இதற்கு அடுத்த கட்ட பரிசோதனை செய்வதற்குள் அந்த பெண் மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டார். இது தொடர்பாக மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், மும்பையில் இருந்து வந்த பெண் கொரோனா பரிசோதனை மருத்துவமனையில் இருந்து தப்பியது உண்மைதான். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

English summary
Goa Govt ordered Probe for a woman managed to skip the mandatory COVID-19 test upon her arrival from Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X