For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் நிலைமை மோசம்.. கொரோனா எங்கெல்லாம் பரவுகிறது என சொல்ல முடியாது.. WHO ஷாக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    coronavirus:A timeline of the COVID-19 outbreak

    முனிச் : கொரோனா வைரஸ் தொற்று இன்னும் சீனாவுக்கு ஒரு அவசரநிலையாக உள்ளது என்றும் இந்த தொற்றுநோய் எங்கு பரவுகிறது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

    2002- 2003ல் சீனாவை தாக்கிய சார்ஸ் வைரஸ் தொற்றை போல் சரியாக 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளது கொரோனா வைரஸ்.

    சார்ஸ் வைரஸ் எப்படி பரவியது, எப்படி போனது இது வரையிலும் புரியாத புதிர் தான்.. அதற்கு இன்று வரை மருத்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

    காதலை ப்ரபோஸ் செய்ய 16 டேங்கர்களை இதய வடிவில் நிறுத்திய ரஷ்ய வீரர்.. ஷாக்கான காதலியின் பதில் இதுதான்காதலை ப்ரபோஸ் செய்ய 16 டேங்கர்களை இதய வடிவில் நிறுத்திய ரஷ்ய வீரர்.. ஷாக்கான காதலியின் பதில் இதுதான்

    6800 பேர் பாதிப்பு

    6800 பேர் பாதிப்பு

    இந்தசூழலில் இப்போது வந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றும் எப்படி பரவியது என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த கொடூரவைரஸ் தாக்குதலால் சீனாவில் இன்று காலை நிலவரப்படி 68000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1665 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேரை புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 142 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    500 பேருக்கு பாதிப்பு

    500 பேருக்கு பாதிப்பு

    சீனாவை தவிர பிரான்ஸ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்பட 30 நாடுகளில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.4 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். இந்த வைரஸ் பீதி இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

    உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள முனிச்நகரில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று இன்னும் சீனாவுக்கு ஒரு அவசரநிலையாக உள்ளது. இந்த தொற்றுநோய் எங்கு பரவுகிறது என்று சொல்ல முடியாது. இந்த வைரஸ் பரவுவதை குறைக்க தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கவலை அளிக்கிறது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.

    இந்தியாவில் எப்படி

    இந்தியாவில் எப்படி

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான சீன சுற்றுலாப் பயணி பிரான்சில் இறந்துவிட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர், இது ஐரோப்பாவில் முதல் மரணமாகவும், சீனாவுக்கு வெளியே நான்காவது மரணமாகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 3 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். துபாயில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.

    English summary
    WHO chief Tedros Adhanom Ghebreyesus said Coronavirus still an emergency for China, it is impossible to tell where the epidemic will spread
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X