• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"புரோகிதரை" கொத்தோடு அள்ளி.. "அரெஸ்ட் பண்ணுங்க".. கலெக்டர் போட்ட அதிரடி ஆர்டர்.. செம ரெய்டு!

|

அகர்தலா: "இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு கலெக்டர்.. இதுகுறித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  Lockdown-ல் கல்யாணம்..முதல்வன் அர்ஜூனாக மாறிய Tripura IAS Officer | Tripura Marriage Video

  தற்போது தேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.. யாராவது இந்த விதிகளை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களும் உத்தரவு பிறப்பித்துள்ளன.

  அப்படி இருந்தும் சில இடங்களில் மக்கள் அசால்ட்டாக இருந்து விடுகிறார்கள்.. ஆனால், இவர்களையும் போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தும் வருகிறார்கள்.. அப்படித்தான், திரிபுராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திரிபுராவிலும் தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது.. அதனால், இரவு நேர லாக்டவுன் இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  அமெரிக்காவில்.. தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டாம்.. பைடன் அரசு கொடுத்த ஸ்பெஷல் ஆபர்! அமெரிக்காவில்.. தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டாம்.. பைடன் அரசு கொடுத்த ஸ்பெஷல் ஆபர்!

  கல்யாணம்

  கல்யாணம்

  இது தெரிந்தும், கடந்த 26-ம்தேதி ஒரு கல்யாணம் இங்கு நடந்துள்ளது.. அதுவும் ஊரையே கூட்டி கல்யாணம் செய்துள்ளனர்.. இரவு நேர ஊரடங்கில் திருமணம் நடத்துவதே விதிமுறைமீறல் என்கிறபோது, இவர்கள் 2 கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தடபுடலாக நடத்தி உள்ளனர்.. இந்த விஷயம், திரிபுரா மேற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் சைலேஷ்குமார் யாதவ்-க்கு தெரியவந்தது..

  2 கல்யாண மண்டபம்

  2 கல்யாண மண்டபம்

  ராத்திரி 11 மணி ஆகிவிட்டதே என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை.. அதிரடியாக அந்த கல்யாண வீட்டுக்குள் கலெக்டர் நுழைந்தார்.. தன்னுடன் போலீஸ் அதிகாரிகளையும் அவர் அழைத்து சென்றிருந்தார்.. குலாப் பாகன் மற்றும் மாணிக்யா கோர்ட் என்ற 2 கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தனர்.. அப்போதுதான், விதிமுறைகளை மீறி, ஏராளமானோர், அந்த கல்யாணத்தில் கலந்து கொண்டிருப்பதை கண்டனர்..

  அனுமதி

  அனுமதி

  பிறகு மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு ரூமுக்குள்ளும் போலீசார் நுழைந்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றினர்.. அப்போது, அந்த வீட்டு பெண் ஒருவர், நாங்கள் முறையான அனுமதியுடன் இந்த கல்யாணத்தை நடத்துகிறோம் என்று கலெக்டரிடம் சொன்னார்.. அத்துடன் கையில் இருந்த அனுமதி பேப்பரையும் காட்டினார்.

   கிழித்து போட்டார்

  கிழித்து போட்டார்

  அந்த பேப்பரை என்ன ஏதென்றுகூட கலெக்டர் படித்து பார்க்கவில்லை.. கடகடவென கிழித்து போட்டு, இரவு நேர லாக்டவுனில் எப்படி அனுமதி தர முடியும்? என்று கேட்டு, பளபளவென புது டிரெஸ்ஸில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையையும், கல்யாணத்தை நடத்தி கொண்டிருந்த பூசாரியையும், இழுத்து கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்து, இவர்களை அரெஸ்ட் பண்ணுங்க என்றார். இதனால் மண்டபம் மட்டுமல்லாமல், அந்த ஏரியாவே பெரும் பரபரப்பாகிவிட்டது.

  உத்தரவு

  உத்தரவு

  இதுகுறித்து கலெக்டர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இவங்க எல்லாருமே 144 தடை உத்தரவை மீறிவிட்டார்கள்.. அதனால், ஐபிசி பிரிவு188ன் கீழ் வழக்கு தொடரப்படும்... உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.. நாளை முதல் இந்த 2 இரு திருமண மண்டபங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு வருஷத்துக்கு தடை விதிக்கிறேன்..

  விதிகள்

  விதிகள்

  இந்த பகுதியில் இரவு நேர லாக்டவுன் இருந்தும், பலர் விதிகளை மீறி உள்ளனர்.. இதுகுறித்து பொதுமக்களே போலீசில் பலமுறை புகார் தந்தும், மேற்கு அகர்தலா காவல் நிலைய பொறுப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.. சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு எந்த ஆக்‌ஷனும் யார் மீதும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.. அதனால், அவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கிறேன்...

  கல்யாணம்

  கல்யாணம்

  இவங்க யாரும் சரியாக இல்லாததால், நானே இப்படி நேரில் வரும் நிலைமை ஆகிவிட்டது.. ஒருவேளை இந்த கல்யாணம் நடந்து யாருக்காவது தொற்று வந்தால், அதுக்கும் அரசாங்கத்தைதான் குறை சொல்வார்கள்.. அதனால், இந்த சம்பவத்தை பொதுமக்கள் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. படிச்சவங்களே இப்படி இருந்தால், பாமரர்களை என்ன சொல்றது?" என்று கேள்வி எழுப்பினார்.

  English summary
  Coronavirus: Tripura DM raids wedding venues 31 detained for flouting, Video Viral
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X