For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா.. இந்தியாவில் வேகம் எடுக்கும் 'க்ளஸ்டர்' பரவல்.. உலக சுகாதார மையம் எச்சரிக்கை.. முழு பின்னணி

இந்தியாவில் கொரோனா பரவி வரும் வேகம் தற்போது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்று அழைக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவி வரும் வேகம் தற்போது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக உலக சுகாதார மையம் அதிகாரிகள் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    இன்று மட்டும் 6 பேர்... தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

    கொரோனா காரணமாக இந்தியாவில் 727 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 88 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இந்தியாவில் 20 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

    கொரோனா பாதிப்பு, பரவல் இந்தியாவில் வேகம் எடுத்து வருகிறது. அமெரிக்காவில் தொடக்க நாட்களில் கொரோனா எப்படி பரவியதோ அதேபோல்தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    எத்தனை வகை பரவல்

    எத்தனை வகை பரவல்

    கொரோனா பரவல் 4 வகைப்படும் என்பது தெரிந்ததே .

    ஸ்டேஜ் 1 என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது.

    ஸ்டேஜ் 2 என்பது கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது லோக்கல் டிரான்ஸ்மிஷன்.

    ஸ்டேஜ் 3 என்பது அந்த வெளிநாட்டு நபர் மூலம் அவரின் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது. இது கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்.

    ஸ்டேஜ் 4 என்பது இந்த கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது பென்டாமிக் (pandemic) டிரான்ஸ்மிஷன்.

    'க்ளஸ்டர்' (Cluster) பரவல்

    'க்ளஸ்டர்' (Cluster) பரவல்

    இதில் புதிதாக சேர்ந்து இருக்கும் பரவல் வகைதான் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஆகும். இந்த பரவல் என்பது ஸ்டேஜ் 2க்கும் ஸ்டேஜ் 3க்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். அதாவது லோக்கல் பரவல் மற்றும் கம்யூனிட்டி பரவல் இரண்டுக்கும் இடையில் இருக்கும் பரவல் ஆகும். இது கொஞ்சம் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரே பகுதியில் பல நூறு பேரை பாதிக்க வாய்ப்புள்ளது.

    இதுதான் விளக்கம்

    இதுதான் விளக்கம்

    'க்ளஸ்டர்' (Cluster) என்பதை தமிழில் கொத்து என்று கூறலாம். 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது, வெளிநாட்டில் இருந்து ஒரு நபர் இந்தியா வந்து, அவர் மூலம் அவரின் உறவினர்களுக்கு கொரோனா பரவி. அந்த உறவினர்கள் மூலம் வேறு சில உறவினர்களுக்கு கொரோனா பரவினால் அது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல். ஒருவர் மூலம் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி தூரத்து உறவினர்களுக்கு கூட கொரோனா பரப்பினால் இப்படி கூறலாம். இதனால் முதலில் யார் கொரோனாவை பரப்பியது என்று கண்டுபிடிக்க முடியும். ஆனாலும் இது சிக்கலானது.

    ஏன் சிக்கல்

    ஏன் சிக்கல்

    இப்படி 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் மூலம் ஒரே குடும்பத்தில், வீட்டில் பலருக்கு கொரோனா பரவும். இதனால் வேகமாக பலர் உடனே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் தற்போது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் இருக்கிறதா என்று கேட்டால், ஆம் இருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட கொரோனா பாதித்த எல்லா மாநிங்களிலும் இந்த 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் இருக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

     'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஏன் சிக்கல்

    'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஏன் சிக்கல்

    இந்த 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் என்பது ஸ்டேஜ் 3 ன் முதல்படி ஆகும். 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் வந்தால் விரைவில் ஸ்டேஜ் 3 பரவல் ஏற்படும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஸ்டேஜ் 3ஐ ஊக்குவிக்க கூடிய பரவல் ஆகும். அதனால் இந்த 'க்ளஸ்டர்' (Cluster) பரவலை எப்படியாவது கட்டுபடுத்த வேண்டும். இல்லையென்றால் ஸ்டேஜ் 3ஐ அது ஏற்படுத்தும். அப்படி ஸ்டேஜ் 3 ஏற்பட்டால் அதை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.

    இந்தியாவில் எங்கெல்லாம் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல்

    இந்தியாவில் எங்கெல்லாம் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல்

    இந்தியாவில் பல இடங்களில் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஏற்பட்டு உள்ளது.

    உதாரணமாக மதுரையில் கொரோனா வந்து பலியான நபர் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் மூலம் கொரோனா பெற்று இருக்கலாம் என்கிறார்கள்.

    டெல்லிக்கு துபாயில் இருந்து வந்த பெண் மூலம் 10 பேருக்கு கொரோனா பரவியது. இதுவும் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல்.

    கேரளாவில் பத்தினம்திட்டாவில் ஒரு குடும்பம் மூலம் அவர்களின் உறவினர்கள் எல்லோர்க்கும் (12 பேர்) கொரோனா பரவியது. இதுவும் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஆகும்.

    அதேபோல் தெலுங்கானாவில் டிஎஸ்பியின் மகன் மூலம் அவர்களின் உறவினர்களுக்கு கொரோனா பரவியதும் 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் ஆகும்.

    English summary
    Coronavirus: What is Cluster Transmissions? Why India should be worried? - All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X