For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை பார்வையிடுகிறது உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் டோங் மருத்துவமனையை உலக சுகாதார நிறுவன குழுவினர் இன்று பார்வையிடுகின்றனர்.

Recommended Video

    8 கி.மீக்கு கன்டெய்ன்மெண்ட் பிளான்... தமிழக அரசு அதிரடி

    இது தொடர்பாக ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியதாவது:

    Coronavirus: WHO team to visit Rajasthans Tonk district

    ராஜஸ்தானில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டோங் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

    இந்த இக்கட்டான தருணத்தில் உலக சுதாதார நிறுவனத்தின் குழுவினர் இன்று டோங் மாவட்டத்தில் ஆய்வு நடத்துகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதுதான் நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். நாம் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும்.

    எப்படி ஏற்பட்டது? சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியதுஎப்படி ஏற்பட்டது? சென்னை தனியார் மால் ஊழியருக்கு கொரோனா.. தீவிரமாக நடந்த விசாரணை.. துப்பு துலங்கியது

    இவ்வாறு சச்சின் பைலட் கூறியுள்ளார்.

    ராஜஸ்தானில் பாதிப்பு எவ்வளவு?

    ராஜஸ்தானில் கொரோனாவால் மொத்தம் 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் குணமடைந்துள்ளனர். 151 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 49 பேரும் பில்வாராவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டோங் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்திருக்கிறது.

    English summary
    A team from the World Health Organisation will visit Rajasthan's Tonk district on Friday to conduct a survey in the wake of rising number of coronavirus cases in the state, Deputy Chief Minister Sachin Pilot said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X