For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு தாலி கட்டுங்க.. கொரோனாவிலிருந்து மீண்டு.. மறு கல்யாணம் செய்து கொண்ட முதிய தம்பதி

கொரோனாவில் மீண்ட தம்பதி மீண்டும் கல்யாணம் செய்து கொண்டனர்

Google Oneindia Tamil News

போபால்: போபாலில் நடந்த இந்த கல்யாணம் ரொம்ப விசேஷமானது. எல்லோரும் நினைத்துப் பெருமை கொள்ள வேண்டியது. காரணம், இந்த கல்யாணத் தம்பதிக்கு வயது 60 க்கு மேல். இருவரும் கொரோனாவில் சிக்கி மீண்டவர்கள்.

இந்தத் தம்பதியின் கொரோனா போராட்டம் உருக்கமானது மட்டுமல்ல.. இவர்களின் அன்பும் மிக மிக ஆழமானது, அழகானது.

 coronvirus: elderly couple beat corona and together marry again

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ என்ற மாவட்டத்தைச் சேர்ந்த ரசிப்லுப் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள். கணவருக்கு 64 வயதாகிறது. மனைவிக்கு 62 வயதாகிறது.

மே 19ம் தேதி இவர்களின் கிராமத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர் அங்கு 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை செய்து பார்த்தனர். அதில் இந்த தாத்தா, பாட்டி உள்பட 13 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். முதலில் தாத்தா குணமாகி விட்டார். அடுத்து பாட்டி குணமானார். இருவரும் தாங்கள் புதுப் பிறவி எடுத்தது போல உணர்ந்தனர். அத்தோடு நிற்காமல் மீண்டும் திருமணம் செய்து கொள்ள பாட்டி ஆசைப்பட்டார். மனைவி விருப்பத்தை கணவர் நிராகரிப்பாரா.. சரி என்று சம்மதித்தார்.

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்... சென்னைக்கு மட்டும் 5 அமைச்சர்களை களமிறக்கிய அரசு கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்... சென்னைக்கு மட்டும் 5 அமைச்சர்களை களமிறக்கிய அரசு

Recommended Video

    ‘States will need permission to hire UP workers'- CM Adityanath

    பிறகென்ன ஊரில் உள்ள கோவிலில் வைத்து மீண்டும் மனைவிக்கு தாலி கட்டினார் தாத்தா. ஊரே கூடி அவர்களை வாழ்த்தியும்,வாழ்த்து பெற்றும் குதூகலித்தது. முன்னதாக இந்த தம்பதி மருத்துவமனையிலிருந்து குணமடைந்த திரும்பும்போது மருத்துவமனை ஊழியர்கள் இவர்களை வாழ்த்தி பூங்கொடுத்து கொடுத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    English summary
    coronvirus: elderly couple beat corona and together marry again
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X