For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.- சி 28 ராக்கெட்டின் கவுண்டவுன் தொடங்கியது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி.- சி 28 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோ வணிக ரீதியாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த 'ஆன்டிரிக்ஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Countdown begins for ISRO's heaviest commercial mission

இதன்படி, பிரிட்டன் நாட்டின், 'டிராஸ்டர் மேனேஜ்மெண்ட் கன்சல்டேஷன்' என்ற, 1,440 கிலோ எடை கொண்ட, மூன்று செயற்கை கோள்களும், அமெரிக்காவை சேர்ந்த, 'சரே' நிறுவனத்தின், மைக்ரோ மற்றும் நானோ என இரு செயற்கைகோள்களும் பி.எஸ்.எல்.வி., சி - 28 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

இந்த செயற்கை கோள்கள் பூமியின், இயற்கை வளங்கள், மண்வளம், நகர்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளன.

வரும் 10ம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.

இதற்கான 62.50 மணி நேர கவுன்டவுண்' இன்று காலை, 7:30 மணிக்கு துவங்கியுள்ளது.

இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுவரை இஸ்ரோ அனுப்பிய வணிக ரீதியான செயற்கைக் கோள்களில் இவைதான் மிகவும் அதிக எடை கொண்டவையாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

English summary
ISRO is all set for its "heaviest" commercial mission to put in orbit five British satellites, with the countdown begining today for the July 10 launch of India's PSLV-C28 from space port of Sriharikota in Andhra Pradesh. The 62.5-hour countdown began today at 07.28 AM and is progressing smoothly, an ISRO official told PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X