For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.எஸ்.எல்.வி சி 27 கவுண்ட்டவுன் “ஸ்டார்ட்ஸ்” – 28ம் தேதி விண்ணில் பாய்கிறது

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 27 ராக்கெட்டை விண்ணில் செலுத்தவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. வருகிற 28 ஆம் தேதியன்று பி.எஸ்.எல்.வி - சி 27 விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் கடல்சார் ஆராய்ச்சிக்காக 4 ஆவது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-டி யை பி.எஸ்.எல்.வி சி-27 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து அனுப்ப திட்டமிட்டிருந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்கியுள்ளது.

Countdown begins for navigation satellite launch

இதுகுறித்து விஞ்ஞானிகள், "பி.எஸ்.எல்.வி சி-27 ராக்கெட் 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து 28 ஆம் தேதி ஏவப்படுகிறது. 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த செயற்கைகோள் 4 நிலைகளில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். இதன்மூலம் இயற்கை சீற்றம், இயற்கை இடர்மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றை கண்காணிக்க முடியும். இந்த ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று மாலை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

English summary
The countdown for the lift of an Indian rocket with the country's fourth navigation satellite as the sole passenger began at 5.49 a.m. on Thursday, the ISRO said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X