For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்எல்வி மார்க் 3 சோதனை வெற்றி – மனிதர்களை அனுப்ப உதவும் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மனிதனை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் வகையிலான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இன்று காலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.

இந்த ராக்கெட்டின் மேல்பகுதியில், 3 மனிதர்களை பத்திரமாக விண்ணுக்கு அனுப்பி மீண்டும், பூமிக்கு அழைத்து வரும் வகையில் "கப் கேக்" வடிவிலான ஒரு அறை போன்ற விண்கல அமைப்பை உருவாக்கி உள்ளனர். இது மாதிரி ராக்கெட் தானே தவிர, முழுமையானது அல்ல.

தொழில்நுட்பங்களின் கலவை:

தொழில்நுட்பங்களின் கலவை:

விண்வெளி வீரர்களின் உடல்நிலை மற்றும் தொழில்நுட்பங்களை கணக்கில் கொண்டும் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடை கொண்ட இந்த அறை 2.7 மீட்டர் உயரமும், 3.1 மீட்டர் சுற்று வட்டமும் கொண்டதாகும்.

கடலில் விழும் வடிவமைப்பு:

கடலில் விழும் வடிவமைப்பு:

ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் 126 கி.மீ உயரத்தை அடைந்ததும், அறை போன்ற விண்கல அமைப்பு ராக்கெட்டில் இருந்து பிரிந்து கடலில் விழுந்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

வெற்றிகர சோதனை:

வெற்றிகர சோதனை:

இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு இது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

126 கிலோ மீட்டர் பயணம்:

126 கிலோ மீட்டர் பயணம்:

இந்த ராக்கெட் விண்ணில் 126 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுவிட்டு, அடுத்த 20 ஆவது நிமிடத்தில் வங்காளவிரிகுடா கடல் பகுதியில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் விழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

தயார் நிலையில் கடற்படை:

தயார் நிலையில் கடற்படை:

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடற்படையினர் கடலில் இருந்து விண்கலத்தை மீட்டு மீண்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் வழங்க உள்ளனர்.

நோக்கமே இதுதான்:

நோக்கமே இதுதான்:

இந்த விண்கலத்தை ராக்கெட்டில் அனுப்புவதின் நோக்கமே, மனிதனை ராக்கெட்டில் வைத்து அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக தான்.

எதிர்ப்பார்ப்பை நனவாக்கிய ராக்கெட்:

எதிர்ப்பார்ப்பை நனவாக்கிய ராக்கெட்:

இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் சுமார் 126 கி.மீ தூரம் வரை சென்ற பிறகு, மனிதன் பயணிப்பதற்கான மாதிரி விண்கலம் மட்டும் சுமார் 19 ஆவது நிமிடத்தில் திட்டமிட்டபடி அந்தமான் அருகே கடலில் விழுந்தது.

பரிசோதனை முயற்சி மட்டுமே:

பரிசோதனை முயற்சி மட்டுமே:

இது பரிசோதனை முயற்சி என்பதால் ராக்கெட்டில் உள்ள முதல் இரு நிலைகள் மட்டும் சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது. 3 ஆவது நிலையான "கிரையோஜெனிக்" என்ஜின் சோதனை நிலை இதில் இடம் பெறவில்லை.

ஆய்வு தொடரும்:

ஆய்வு தொடரும்:

கடலில் இருந்து மீட்கப்படும் விண்கலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மொத்த செலவு 155 கோடி:

மொத்த செலவு 155 கோடி:

இந்த ராக்கெட்டை வடிவமைக்க ரூபாய் 140 கோடியும், விண்வெளி வீரர்கள் அமரும் அறை போன்ற அமைப்பை உருவாக்க ரூபாய் 15 கோடியும் சேர்த்து ரூபாய் 155 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஒப்புதல்:

மத்திய அரசு ஒப்புதல்:

ஆனால் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான முறையான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் மனிதர்களை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, இதுபோன்ற தொழில் நுட்பம் கைகொடுக்கும்.

4 ஆவது நாடாக பெருமை:

4 ஆவது நாடாக பெருமை:

இந்நிலையில் இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளின் வரிசையில் 4 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அத்துடன், அதிகமான எடை கொண்ட விண்கலத்தை விண்ணில் அனுப்பிய பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து:

பிரதமர் மோடி வாழ்த்து:

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டினை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த வெற்றி இது என்று பாராட்டி உள்ளார்.

English summary
Indian Space Research Organisation (Isro) on Thursday successfully conducted an experimental test-flight of GSLV MK III carrying a crew module, to be used in future manned space missions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X