For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமிகள் பலாத்கார வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!

பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி- ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஜோத்பூர்: குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

    நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரமங்களை நிறுவி ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்தார் சாமியார் ஆசாராம் பாபு. அவர் மீது குஜராத், உபி சிறுமிகள் பலாத்கார புகார்களைத் தெரிவித்தனர்.

    Court convicts Asaram Bapu in 2013 rape case

    இதையடுத்து 2013-ம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் ஆசாராம் பாபு உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆசாராம் பாபு அடைக்கப்பட்டுள்ள சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில் சாமியார் ஆசாராம் பாபு உட்பட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆசாராம் பாபுவின் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    பின்னர் பிற்பகலில் ஆசாராம் பாபு உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி வெளியிட்டார். அதில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 2 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    English summary
    Asaram Bapu has been convicted by Jodhpur Scheduled Caste and Scheduled Tribe Court in a 2013 rape case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X