For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி பாஸ்போர்ட் வழக்கு: சோட்டா ராஜன் மீதான குற்றப்பத்திரிகையை ஏற்றது நீதிமன்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய போலீசார் வசமுள்ள சர்வதேச நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீது, போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப்பத்திரிகை ஃபிரேம் செய்யப்பட்டது.

இந்தியாவில் குறிப்பாக மும்பையில் நடைபெற்ற பல கொலை, கொள்ளை செயல்களில் தொடர்புள்ளவன் நிழலுலக தாதா சோட்டா ராஜன். போலி பாஸ்போர்ட் உதவியுடன் நாட்டைவிட்டு தப்பிய சோட்டா ராஜன், கடந்த ஆண்டு, இந்தோனேஷியாவில் பிடிபட்டார்.

Court frames charges against gangster Chhota Rajan

இதையடுத்து இந்தியா கொண்டுவரப்பட்ட சோட்டா ராஜன், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மோகன்குமார் என்பவரது பெயரில், போலி பாஸ்போர்ட் எடுத்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை ஃபிரேம் செய்யப்பட்டது. பிப்ரவரி 2ம் தேதி இந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று ஃபிரேம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 11ம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெற வேண்டும் என்று நீதிபதி வினோத் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், மண்டியாவில் உள்ள முகவரியுடன் மோகன் குமார் என்ற பெயரில் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி என்ற சோட்டா ராஜனுக்கு பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சுற்றுலா விசா)பெற்று ஆஸ்திரேலியாவுக்கு சோட்டா ராஜன் கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Alleged gangster Chhota Rajan has today been charged for procuring a fake passport by a special court. Special CBI Judge Vinod Kumar passed the order after Rajan, produced before the court via video conferencing, pleaded not guilty and claimed trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X