For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நான் சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை, இளம் பெண்ணைத்தான்..." என்ற ஆசாராமின் மனு தள்ளுபடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: நான் பலாத்காரம் செய்தது சிறுமியை அல்ல, இளம் பெண்ணை என்று கோர்ட்டில் தெரிவித்த சாமியார் ஆசாராமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது சாமியார் ஆசாாரம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் இருந்து விடுதலையாக அவர் பல மனுக்களை கோர்ட்டில் தாக்கல் செய்துவருகிறார்.

Court rejects Asaram Bapu plea challenging age of victim

இந்நிலையில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனது ஐந்தாவது மனுவை தாக்கல் செய்த ஆசாராம், அதில், நான் பலாத்காரம் செய்ததாக கூறும் பெண் சிறுமி கிடையாது.

மேஜர் ஆகிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஆதாரமாக சிறுமியின் தொடக்கப்பள்ளிச் சான்றிதழை அளித்தார். ஆனால் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், வயதை நிர்ணயிக்க இரண்டாம் நிலை பள்ளி சான்றிதழ்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது வழிகாட்டு நெறிமுறையில் சுட்டிக்காண்பித்துள்ளது.

எனவே ஆரம்ப கல்வி சான்றிதழில் உள்ள பிறந்த நாள் தேதி ஆதாரமாக ஏற்கப்பட மாட்டாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், சாமியாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

English summary
A plea by Asaram, challenging the age of the minor girl allegedly sexually assaulted by the self-style godman, was today rejected by a court here which also slapped a fine of Rs 5,000 on him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X