For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோர்ட்டுக்கு வராவிட்டால் குண்டுக்கட்டாக தூக்கிவர உத்தரவு: சரிதா நாயருக்கு நீதிபதி கெடுபிடி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோர்ட்டுக்கு விசாரணைக்கு வராமல் புறக்கணித்தால் குண்டு கட்டாக தூக்கி வர உத்தரவிடுவேன் என நீதிபதி கண்டித்ததால் சரிதா நாயர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

Court slams sritha Nair

இந்த விசாரணை கமிஷன் முன் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜி ராதாகிருஷ்ணன் ஆதியோர் ஆஜாராகி வாக்குமுலம் அளித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜாரான போது முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆர்யடன் முகமதுவுக்கு ரூ.40 லஞ்சமும் கொடுத்ததாக கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

இந்த விசாரணை கமிஷன் பதவி காலம் முடிய இன்னும் ஓருசில மாதங்களே இருப்பதால் கமிஷன் கூறும் நாட்களில் உடனே ஆஜாராகி ஆதாரங்களை ஓப்படைக்க வேண்டு்ம் என சரியா நாயருக்கு நீதிபதி சிவராஜன் உத்தரவிட்டார். ஆனால் ஓரு சில நாட்கள் மட்டுமே சரிதா நாயர் ஆஜரானார். சில தினங்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நேற்று ஆஜாராக வேண்டும் என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். ஆனால் தொண்டை வலி இருப்பதால் ஒரு வாரத்திற்கு தன்னால் வரமுடியாது என சரியா நாயர் அவரது வக்கீல் மூலம் கமிஷனுக்கு தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி சிவராஜன் கூறுகையில், விசாரணை கமிஷன் முன்தொடர்ந்து ஆஜாராகாமல் இருக்கும் சரிதா நாயரை கோர்ட் நினைத்தால் குண்டு கட்டாக தூக்கி வர முடியும். எனவே நாளை கண்டிப்பாக கோர்ட்டில் சரிதா நாயர் ஆஜாராக வேண்டும் எனவும் இல்லாவி்ட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தது சரிதா நாயரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Court slams sritha Nair as she is avoiding court proceedings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X