For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளியே வராதீங்கன்னு கேட்பதே இல்லை.. உக்கி போடு.. இதுதான் சரியான தண்டனை.. இது தேவையா!

Google Oneindia Tamil News

அமிருதசரஸ்: கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சாலைகளில் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீஸார் தோப்புக் கரணம் போட வைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.

Recommended Video

    போலீஸ் தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டுக்குள் ஓடிய இளைஞர்

    கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500- ஐ தாண்டியது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 10-க்கு மேல் உயர்ந்துள்ளது.

    கொரோனா பொருளாதார பாதிப்பை சமாளிக்க.. வேகமாக ரெடியாகும் பேக்கேஜ்.. நிர்மலா அறிவிப்பு கொரோனா பொருளாதார பாதிப்பை சமாளிக்க.. வேகமாக ரெடியாகும் பேக்கேஜ்.. நிர்மலா அறிவிப்பு

    அம்சங்கள்

    இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், பள்ளி, கல்லூரிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன.

    மோசமான விளைவுகள்

    மோசமான விளைவுகள்

    மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பஞ்சாப், மும்பை, நாக்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் மோசமான விளைவுகள் தெரியாமல் அரசு கூறியும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரிகிறார்கள்.

    நடுரோட்டில்

    நடுரோட்டில்

    இதையடுத்து பஞ்சாப்பில் லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மலேர்கோட்லா பகுதியில் இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அத்தியாவசியத்திற்காக வெளியே வரவில்லை என தெரிந்தது. இதையடுத்து அவர்களை நடுரோட்டில் வைத்து தோப்புக் கரணம் போட வைத்தனர்.

    நாராயணசாமி

    நாராயணசாமி

    பின்னர் அவர்களை வெளியே போக வேண்டாம் என எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசத்தில் 144 தடையுத்தரவை அடுத்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Covidiots are punished by police for roaming in the streets violating lockdown protocol. A Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X