For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டு சாணமும் கோமியமும் கொரோனாவுக்கு அருமருந்தாம்... பாஜக எம்.எல்.ஏ.வின் அரிய கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

குவஹாத்தி: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க மாட்டு சாணம், மாட்டு கோமியம் ஆகியவை உதவும் என்று அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

அஸ்ஸாம் சட்டசபையில் கால்நடைகள் கடத்தல் தொடர்பான விவாதத்தின் போது சுமன் ஹரிபிரியா பேசியதாவது:

Cow Dung and Urine.. Remedy for Coronavirus, says Assam BJP MLA

மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலம் வெளியாகும் புகைக்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் திறன் இருக்கிறது. மாட்டு சாணம், கோமியத்தை பயன்படுத்துவது தொடர்பாக அரசும் ஆய்வு செய்து வருகிறது.

குஜராத்தில் மாட்டு சாணம், மாட்டு கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், நோயாளிகளுக்கு மருந்தாகவே கொடுக்கப்படுகிறது. இதை கொடுக்கும் போது நோயாளிகளை பசுவின் அருகே அமரவும் வைக்கின்றனர்.

மாட்டு சாணம் மற்றும் கோமியம் ஆகியவை புற்றுநோயை குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டவை. நமது முன்னோர்கள் மதரீதியான சடங்குகளில் சாணம், கோமியத்தை பயன்படுத்துவதன் பின்னணியில் அறிவியலும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

மாடுகள் நமக்கு தரும் ஒவ்வொரு பொருளுமே மிகவும் முக்கியமானவை. முனிவர்கள் துளசி இலைகளை அன்று சடங்குகள், யாகங்களுக்கு பயன்படுத்தினர். இன்று நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது துளசி இலை என பயன்படுத்துகிறோம்.

Recommended Video

    Corona outbreak: கொரோனா வராமல் தடுக்க உ.பி.முதல்வர் கொடுத்த ஐடியா

    மாட்டு சாணம், கோமியம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாநில பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ஹிமாந்தா பிஸ்வாஸ் ஆய்வு செய்து வருகிறார். அவரிடம் இருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன். இவ்வாறு சுமன் ஹரிபிரியா கூறினார்.

    English summary
    Assam BJP MLA Suman Haripriya has said that cow urine and cow dung are remedy for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X