For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டிறைச்சி தடை விவகாரம்: பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்!

மாடுகளை இறைச்சிக்காக விற்பதில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மிருகக் காட்சி விலங்குகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

By Devarajan
Google Oneindia Tamil News

மைசூர்: இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்றும், விவசாயப் பணிகளுக்கு, வாங்கக்கூட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், வன உயிரின பூங்காக்கள், மிருகக் காட்சி சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு, உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மைசூரில் உள்ள மிருகக் காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள காட்டு நாய்கள், புலி, சிங்கம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சுமார் 113.15 டன் மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி குறிப்பிட்ட இடைவெளிகளில் புலி, சிங்கம், காட்டு நாய்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 Cow Sale ban affects Zoo animals too in Mysore

இந்நிலையில், மத்திய அரசு விதித்துள்ள திடீர் தடை காரணமாக, மைசூர் மிருகக் காட்சி சாலையில் உள்ள இந்த விலங்குகளுக்கு, இரை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாற்று உணவை ஏற்பாடு செய்து விநியோகித்தாலும், அவற்றை இந்த விலங்குகள் ஏற்பதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Mysuru: The recent decision of the Narendra Modi government of banning sale of cows to the slaughter houses in the country has not only caused tension for mankind in India, but also animals in renowned Mysore Chamarajendra Zoo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X