For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் மாடுகள்! சிக்கன்.. மட்டன்.. மீன் வறுவல் தான்.. கோவாவில் ஆச்சர்யம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cows have turned non-vegetarian in Goa

    பனாஜி: இந்தியாவின் புகழ் பெற்ற கடற்கரை சுற்றுலாத்தளமாக கோவாவில் சுற்றி திரியும் பசு மாடுகள், காளைகள், சிக்கன், மட்டன் மற்றம் மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றன. இதையடுத்து இவற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    கோவா நாட்டின் மிகப்பெரிய புகழ் பெற்ற கடற்கரை சுற்றுலா தளமாகும். இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டினர் அதிகமாக வந்து செல்வார்கள். இதேபோல் உள்நாட்டிலும்அதிகப்படியாக மக்கள் வந்து செல்லும் பகுதியாகும்.

    கோவாவின் வட கடலோரப் பகுதிகள் மற்றும் கலங்குட் மற்றம் கேண்டோலிம் ஆகிய பகுதிகளில் மிக அதிக அளவில் சுற்றலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் பசுக்கள் காளைகள், கன்றுக்குட்டிகள் அதிக அளவில் சுற்றித்திரிந்தன. இவை அனைத்தும் வைக்கோலுக்கு பதிலாக அசைவ உணவுக்கு மாறிவிட்டன.

     குறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல் குறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்

    கோசாலையில்

    கோசாலையில்

    ஏனெனில் இவை கோவாவில் உள்ள ஓட்டல்களில் இருந்து அசைவ உணவு கழிவுகளையே சாப்பிட்டு பழகிவிட்டன. இதனிடையே கலங்குட் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 75 பசுக்கள் பனாஜியி உள்ள கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

    வைக்கோல் சாப்பிட மறுப்பு

    வைக்கோல் சாப்பிட மறுப்பு

    இந்த மாடுகளுக்கு இப்போது சிக்கன், மட்டன், மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளை மட்டுமே இப்போது சாப்பிடுகிறது. வழக்கமாக கால்நடைகள் வைக்கோல், கரும்பு சோகை, புல் உள்ளிட்ட தாவரங்களைத்தான் சாப்பிடும். இந்த மாடுகள் எதுவே அவற்றை சாப்பிட மறுப்பதால் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் பாராமரிக்கப்படுகின்றன.

    அசைவ உணவு

    அசைவ உணவு

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கோவா அமைச்சர் மைக்கேல் லோபோ, சிக்கன், மட்டன் மற்றம் மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளை மாடுகள் சாப்பிட காரணம் இங்குள்ள ஓட்டல்களின் கழிவுகளை அவை சாப்பிட்டு பழகியது தான் காரணம் என்றும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    மருத்துவர்கள் முடிவு

    மருத்துவர்கள் முடிவு

    இதனிடையே பனாஜியில் பசு மாடுகளை பராமரித்து வரும் கோசாலை நிர்வாகிகள் அந்த மாடுகளின் தீவன பழக்கத்தை அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றுவதற்கான சிகிச்சை அளிக்க, கால்நடை மருத்துவர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.

    English summary
    bulls, cows and calves have turned non-vegetarian in Goa. as they have become habituated to eat mixed waste dumped by restaurants which also consist of scraps of chicken and fish.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X