For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாகப்பட்டினம் இந்துஸ்தான் கப்பல்தளத்தில் கிரேன் உடைந்து 11 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு!!

Google Oneindia Tamil News

விசாகப்பட்டினம்: ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் கப்பல் தளத்தில் கிரேன் உடைந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ் பாபு உறுதிபடுத்தியுள்ளார். சரக்கு பளு ஏற்று சோதனையின்போது கிரேன் உடைந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

Crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam 10 dead

பெரிய சத்தத்துடன் கிரேன் அப்படியே கீழே சாய்கிறது. கிரேன் அருகே நின்று கொண்டு இருந்தவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் விழுந்ததில் 11 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கிரேனில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. தளத்தில் இருந்து கிரேன் அப்படியே அடியோடு சாய்ந்து கிடக்கிறது. அருகில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam 10 dead

இந்த விபத்தில் இதுவரைக்கும் 11 பேர் உயிரிழந்து இருப்பதாக விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''புதிய கிரேன் பொருத்தும் பணி நடந்து முடிந்தது. முழு அளவிலான பணியை செயல்படுத்த கிரேன் இயக்கப்பட்டது. இந்துஸ்தான் கப்பல் தளம் மற்றும் மாவட்ட அளவிலான உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

Recommended Video

    Gas Leakage in Andhra Pradesh , Reason Styrene Gas

    விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் மற்றும் விசாகப்பட்டினம் நகர போலீஸ் கமிஷனர் இருவரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam 10 dead
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X