For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பான காங்கிரஸ் கூட்டணி

By Mathi
|

டெல்லி: மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், பரூக் அப்துல்லா ஆகியோரும் குஜராத் முதல்வர் மோடிக்கு ஆதரவாக பேசிவருவதன் மூலம் இவர்களது தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு விடை கொடுத்துவிடும் போலிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 10 ஆண்டுகாலத்தில் பெரும்பான்மையான கூட்டணி கட்சிகளை இழந்து.. அதாவது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.

இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டணிகள் காலந்தோறும் உருவாவதும் அவற்றில் இடம்பெறும் கட்சிகள் அணி மாறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் உருவானது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகாலங்களில் இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான கட்சிகள் கழன்று கொள்ள இப்போது காங்கிரஸ் தனித்துவிடப்பட்ட நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஐமு கூட்டணியின் தற்போதைய கட்சிகள்

ஐமு கூட்டணியின் தற்போதைய கட்சிகள்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தள், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, இந்திய யூனியன் முலிம் லீக், கேரளா காங்கிரஸ், சிக்கிம் ஜனநாயக முன்னணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை ஐமு கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள்.

முந்தைய கட்சிகள்..

முந்தைய கட்சிகள்..

இதே ஐக்கிய முற்போக்குக் கூட்டணிகள் முன்பு இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திமுக, மதிமுக, பாமக, மக்கள் ஜனநாயக கட்சி, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, லோக் ஜனசக்தி, குடியரசு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, மஜ்லிஸ் கட்சி என பெரும் பட்டியலே இருந்தது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

இந்த கட்சிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிதான் முதலில் ஐமு கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனாலும் தற்போது தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதுடன் காங்கிரஸிலேயே கரைந்து போய்விடவும் தயாராக இருக்கிறது.

மதிமுக

மதிமுக

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 3 ஆண்டுகாலம் நீடித்தது மதிமுக. 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அணியில் இருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மதிமுக. ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே மதிமுகவும் நீடித்தது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் பின்னர் 2007ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது.

பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் பரம வைரியான முலாயம்சிங் யாதவின் ஆதரவை பெற காங்கிரஸ் முடிவெடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 2008ஆம் ஆண்டு அறிவித்தார்.

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியில் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது மத்திய அரசு. அப்போது நூலிழையில் மத்திய அரசு தப்பியது. சமாஜ்வாடி கட்சி, ஐமு கூட்டணியை ஆதரித்தது.

மக்கள் ஜனநாயக கட்சி

மக்கள் ஜனநாயக கட்சி

2008ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியை காங்கிரஸ் ஆதரிக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து 2009ஆம் ஆண்டு மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, ஐமு கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாமக

பாமக

2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியும் விலகியது.

மஜ்லிஸ் கட்சி

மஜ்லிஸ் கட்சி

ஆந்திர பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2012ஆம் ஆண்டு ஐமு அரசுக்கான ஆதரவை மஜ்லிஸ் கட்சி விலக்கிக் கொண்டது.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ்

அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் மோதிய திரிணாமுல் காங்கிரஸ் 2012ஆம் ஆண்டு ஆதரவை விலக்குவதாக அறிவித்தது.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா

திரிணாமுல் காங்கிரஸைத் தொடர்ந்து அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐமு அரசுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் விலக்கிக் கொண்டது.

திமுக

திமுக

ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு வெளியேறியது திமுக

தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி

தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியும் ஐமு கூட்டணியில் இருந்து விலகும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. இவை இரண்டும்தான் அக்கூட்டணியில் இருக்கும் பிரதான கட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2004-ல் பிரம்மாண்டமாக உருவெடுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014-ல் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போலாகிவிட்டதே...

English summary
It is a worrying time for the Congress party as its key allies at the Centre, the National Conference (NC) and Nationalist Congress Party (NCP), are hinting at parting ways ahead of the Lok Sabha elections. While NCP leader Praful Patel defended BJP prime ministerial candidate Narendra Modi saying the 2002 Gujarat riots should be laid to rest, NC leader and Jammu & Kashmir Chief Minister Omar Abdullah said his party isn't averse to fighting the elections alone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X