For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது அது கருப்பா.. ஐயோ ஓடு.. மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக் வீடியோ

Google Oneindia Tamil News

அகமதாபாத்: மழை, வெள்ளம் எல்லாம் நம்மூரிலும்தான் வருகிறது. அதற்காக இப்படியா ஒரு சம்பவம் நடக்கும். நினைச்சி பார்க்கவே நெஞ்சம் திடுக்கிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் குஜராத் மாநிலம் வதேதாரா நகரில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை. அதிலும் வதோதரா நகரில் நேற்று 12 மணி நேரத்தில் சுமார் 40 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Crocodiles entered the Vadodara city

இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்ல கூட கஷ்டப்படும் நிலையில் உள்ளது மக்கள் நிலை. போதாத குறைக்கு, இந்த வெள்ளத்தோடு வெள்ளமாக ஊருக்குள் முதலைகளும் வந்துவிட்டால் நிலைமை என்னவாகும்.

நினைத்து பார்க்கவே அச்சமூட்டும் இந்த கற்பனை, வதோதராவில் நிஜமாகவே நடந்துள்ளது. வந்த முதலை தெருநாயை விழுங்க பார்த்த சம்பவமும் அங்கே அரங்கேறியுள்ளது. இந்த திக் திக் காட்சி வீடியோவில் பதிவாகி நாடெங்கும் வைரலாக சுற்றி வருகிறது.

அதில் ஒரு முதலை மெல்ல மெல்ல நீந்தி வருவதும், அதை அறியாமல் இரு தெருநாய்கள் நிற்பதும் தெரிகிறது. ஒரு கட்டத்தில், அதில் ஒரு நாயை நெருங்கிவிட்டது முதலை, கிட்டத்தட்ட அதன் காலை பிடிக்க பார்த்தது. இது என்னப்பா ஏதோ தட்டுப்படுகிறதே என திடுக்கிட்ட நாய், குதித்து ஓடியதே பார்க்கலாம். அப்பாடா நிம்மதி. நாய் உயிர் தப்பியது.

இந்த திக் திக் காட்சியை நீங்களும் பாருங்கள்.

English summary
Number of crocodiles have entered the Vadodara city in Gujarat while raining and try to eat a dog.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X