For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியல்... முதலிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

Google Oneindia Tamil News

அமராவதி: இந்தியாவில் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம்.

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர முதல்வர்கள் குறித்த பட்டியலை அசோசியே‌ஷன் ஆப் டெமாகிரட்டிக் ரீ பார்ம் நிறுவனம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து நடத்தியது. தற்போது கோடீஸ்வரர் பட்டிலில் உள்ள முதல்வர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

Crorepati Chief Ministers list, Chandrababu Naidu on Top

இந்த பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம். இதைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா கண்டு 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.129.57 கோடியாக உள்ளது.

ஆந்திர அமைச்சரவையில் 20 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் 18 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்களில் முதல் இடத்தில் அமைச்சர் நாராயணா உள்ளார். அவர்கள் தங்களது சொத்து மதிப்பை தேர்தல் கமி‌ஷனில் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's Crorepati CM list is released by Association of Democratic Reform which shows that Andhra Chief Minister is on top of the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X