For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தீஸ்கரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டிஸ்கர் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல்-வீடியோ

    ராய்பூர்: சத்தீஸ்கரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

    CRPF police commits suicide in Chattisgarh

    மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ராஜீவ் குமார் சிங்(37) தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். நேற்று மதியம் 12.20 மணி அளவில் அவர் தன்னுடன் பணியாற்றும் ஒருவரின் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக் கொண்டார்.

    உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ராஜீவ் குமார் சிங் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 148வது பட்டாலியனில் பணியாற்றிய அவர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டது சக போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Rajiv Kumar Singh, a 37-year-old Central Reserve Police Force soldier on election duty has committed suicide by shooting himself in Chattisgarh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X