For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூதாட்ட கணவனால் சித்ரவதை!... நீதிக்காக மும்பைப் பெண் டுவட்டரில் கதறல்!

சூதாட்டம், பெண்களின் சவகாசம் உள்ளிட்ட பழக்கத்தால் பல ஆண்டுகளாக சித்திரவதை அனுபவித்து வருவதாகவும் தனக்கு நீதி வேண்டும் என்றும் மும்பைப் பெண் ஒருவர் டுவிட்டரில் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சூதாட்ட கணவர், கதறும் ட்விட்டரில் கதறும் மனைவி- வீடியோ

    மும்பை : சூதாட்டம், பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட பழக்கத்தால் பல ஆண்டுகளாக கணவனால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதாக மும்பை பெண் ஒருவர் டுவிட்டரில் கதறியுள்ளார். பல முறை புகார் அளித்தும் கணவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் இது தனது கடைசி முயற்சி என்றும் இப்போதும் நீதி கிடைக்காவிட்டால் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

    இயக்குனர் அசோக் பண்டிட் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் பெண் பல ஆண்டுகளாக தான் கணவனால் சித்திரவதைக்கு ஆளாவதாகக் கண்ணீர் விடுகிறார்.

    ஆட்டோமொபைல் தொழில் செய்யும் தன்னுடைய கணவர் குர்ப்ரீத் சிங்கால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாவதாக அந்தப் பெண் கூறுகிறார். தன்னுடைய குழந்தைகளின் நலனுக்காகவே அவருடன் வாழ்ந்து வருவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

    கொல்ல முயற்சி

    கொல்ல முயற்சி

    ஆனால் சூதாட்டம், பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட பழக்கங்களால் தொடர்ந்து துன்புறுத்தல்கள் தருகிறார். அண்மையில் நான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில் மின்சாரத்தை பாய்ச்சி என்னுடைய உயிரை பறிக்க முயன்றார். இது குறித்து கார் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்துள்ளேன்.

    கணவருக்கு துணைபோகும் போலீஸ்

    கணவருக்கு துணைபோகும் போலீஸ்

    ஆனால் வழக்கு பதியாமல் அந்த காவல் ஆணையர் என்னுடைய கணவனுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு சாதகமாகவே செயல்படுகிறார். ஒவ்வொரு முறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரை கேட்டு வருகிறேன், ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை.

    தொடரும் சித்திரவதைகள்

    தொடரும் சித்திரவதைகள்

    தன்னுடைய பெயரில் இருக்கும் ஒரே வீட்டை கூட கணவர் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் நேற்று முதுகில் பாட்டிலால் உடைத்து காயம் ஏற்படுத்தியதாகவும் கதறுகிறார் பாதிக்கப்பட்ட பெண். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.

    நீதி கிடைக்க உதவுங்கள்

    நீதி கிடைக்க உதவுங்கள்

    கடைசி முயற்சியாக சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்கிறேன். எனக்கு நீதி கிடைத்தாக வேண்டும், அவ்வாறு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் உயிரை விடுவதை விட வேறு வழியில்லை என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    English summary
    Filmmaker Ashoke Pandit posted the video on the woman weeping Woman said husband has been "torturing" her for several years and the woman says Police also denying the justice for her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X