For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.எஸ்.கே. வுக்கு 2 ஆண்டுகள் தடையை எதிர்த்து மேல் முறையீடு.,. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் முடிவு...

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை அணிக்கான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது.

csk

மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.எம்.லோதா குழுவின் பரிந்துரை குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆலோசித்ததாகவும் ஆலோசனை முடிவில் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

English summary
The suspended IPL teams, Rajasthan Royals and Chennai Super Kings, have decided to re-appeal to same bench to review the two years ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X