For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.. குமாரசாமியை சந்தித்த பிறகு கமல் டிவீட்

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கர்நாடகா தமிழகம் இடையே புதிய உறவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கர்நாடகா தமிழகம் இடையே புதிய உறவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு மூலம் அம்மாநில முதல்வராக மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பதவி ஏற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் இந்தியாவின் முக்கிய தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பாஜக கட்சியை தவிர, பல மாநில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Curious to see what follows, Kamal tweets after his meeting with Kumaraswamy

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட மேடையில் மக்கள் நீதி மய்ய கமல்ஹாசனும் கலந்து கொண்டார். குமாரசாமி அவருக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு மாநிலங்களின் உறவில் இது நல்லதொரு தொடக்கமாக இருக்கும். மற்ற கட்சியினர் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இது நல்ல தளமாக அமைந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்'' என்றுள்ளார்.

நேற்றைய பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சியினர், மாநில கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மேடையில் இருந்தது, முக்கியமான அரசியல் திருப்பமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Haasan tweets, ''I thank the CM of Karnataka @hd_kumaraswamy for inviting me. Hearty congratulations to the new Govt. It’s a good starting point for a dialogue between our States. It was also a platform for a healthy exchange of views with all other party leaders.Curious to see what follows.'' after his meeting with new Karnataka CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X