For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத்தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? அருண் ஜேட்லி விளக்கம்

போதுமான அளவுக்கு பணப்புழக்கம் உள்ளதாகவும் தட்டுப்பாடு என்பது தற்காலிகம்தான் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ

    டெல்லி: வங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் உள்ளதாகவும், போதுமான பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

    மகாராஷ்டிரத்தின் கிழக்கு பகுதி, பீகார் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று முதல் ஏடிஎம்களில் பணம் இல்லை. அதுபோல் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பணம் இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.

    Currency shortage is temporary- Arun Jaitley

    இந்த நிலையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் பணம் இல்லாமல் இருந்ததாக ஏடிஎம் சென்றவர்கள் தெரிவித்தனர். தமிழகத்திலும் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லை என்று புகார்கள் எழுந்தன.

    கடந்த 3 தினங்களாக பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், நாடு முழுவதும் பணம் விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான இடங்களில் தேவைக்கு அதிகமான அளவில் பணப் புழக்கம் இருந்து வருகிறது. அதே போல் வங்கிகளில் பணம் இருக்கிறது. இந்த பணத்தட்டுப்பாடு தற்காலிகம்தான். சில பகுதிகளில் பணத்தேவை அதிகரித்ததால் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    FM Arun Jaitley says that Have reviewed the currency situation in the country. Over all there is more than adequate currency in circulation and also available with the Banks. The temporary shortage caused by ‘sudden and unusual increase’ in some areas is being tackled quickly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X