For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்லாமிய ஊழியரை அனுப்பாதீங்க.... பெண்ணின் அதிர வைக்கும் டுவீட்டால் கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய ஊழியரை அனுப்ப வேண்டாம் என்ற டுவிட்டால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏர்டெல் நிறுவனத்திற்கு பெண் வைத்த கோரிக்கையால் சர்ச்சை- வீடியோ

    டெல்லி: இஸ்லாமிய ஊழியரின் பணி நேர்மை மீது நம்பிக்கை இல்லை என்பதால் அந்த ஊழியரை அனுப்ப வேண்டாம் என்று பூஜா சிங் என்பவர் போட்ட டுவிட்டால் சர்ச்சை எழுந்துள்ளது.

    பூஜா சிங் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ஏர்டெல் டிடிஎச் மறு இணைப்பு செய்ய வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.

    அதற்காக ஏர்டெல் சார்பில் இருந்து நியமிக்கப்பட்ட சேவை பொறியாளர் தன்னிடம் தொலைபேசியில் பேசியபோது தவறாக பேசியதாகவும் இனி தன்னை அழைக்கவே கூடாது என்று அந்த ஊழியர் தெரிவித்ததாகவும் பூஜா சிங் குற்றம்சாட்டியிருந்தார்.

    புகார்

    புகார்

    அத்துடன் அந்த சேவை பொறியாளரின் தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்களின் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என்றும் புகார் கூறியிருந்தார். பூஜாவின் இந்த டுவீட்டை பார்த்ததும் ஏர்டெல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் பதிலளித்துள்ளார். அதில் உடனடியாக இதுபோன்ற விஷயத்தை கவனத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி.

    சர்ச்சை பதில்

    சர்ச்சை பதில்

    இது தொடர்பாக நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். நன்றி ஷோயஃப் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பூஜா சிங் பெரும் சர்ச்சைக்குரிய பதிலை அளித்துள்ளார். அவர் அனுப்பிய பதிலில், ஷோயஃப் நீங்கள் ஒரு முஸ்லிம். எனக்கு உங்களது பணி நேர்மை மீது நம்பிக்கை இல்லை.

    தேவையை பூர்த்தி

    ஏனெனில் குரானில் வாடிக்கையாளர் சேவை குறித்து பல முறைகள் இருக்கிறது. எனவே நீங்கள் ஒரு இந்து பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பூஜா உங்களுக்கு எந்த நேரத்தில் வேண்டும் எனக் கூறுங்கள் நீங்கள் சிறந்த முறையில் உங்கள் தேவையை பூர்த்தி செய்கிறோம்.

    நெட்டிசன்கள் கண்டனம்

    உங்கள் தொலைபேசி எண்ணை பகிருங்கள். உதவுகிறோம். நன்றி ககன்ஜோத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூஜாவின் கோரிக்கையை ஏர்டெல் நிறுவனமும் ஒப்புக் கொண்டதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் பூஜா சிங்கையும் ஏர்டெல்லையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கின்றனர்.

    English summary
    A customer of telecom company Bharti Airtel refused to interact with a Muslim customer executive on Twitter due to his faith.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X