For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்!

மேற்கு வங்க புயல் பாதிப்பை பார்வையிட புறப்பட்டார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 83 நாட்களுக்கு பிறகு டெல்லியை விட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி.. ஆம்பன் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக மேற்கு வங்காளம் சென்றார்... விமானத்தில் பறந்தபடியே அம்மாநிலத்தின் ஆம்பன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதையடுத்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Recommended Video

    Cyclone Amphan Video Footage | Lightning | Flood

    வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாக போகிறது என்று அறிவித்தபோதுகூட இந்த அளவுக்கு பாதிப்பை தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. குறிப்பாக 72 பேரை காவு வாங்கி சென்றள்ளது இந்த ஆம்பன்.. அந்த சூறாவளிக்கு ஓங்கி உயர்ந்த மரங்கள் முறிந்தும், கரண்ட் கம்பிகள் அறுந்து தொங்கியும் மிரட்டியது... முக்கியமாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கொல்கத்தா. மேற்கு மித்னாபூர், கிழக்கு மித்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் சேதத்தின் பாதிப்பு ஏராளம்.. ஏராளம்!!

     cyclone amphan: pm modi to visit west bengal of damage caused by cyclone

    ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.. அவர்களின் பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி உள்ளன... பெரிய பெரிய பாலங்களே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை கண்டு மக்கள் நடுங்கினர்.. இங்கே பேயாட்டம் புயல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் இதேபோல பாதிப்பை தந்துள்ளது. மேற்கு வங்கத்தில் அடித்து சுழட்டிய புயலின் தாண்டவம் வீடியோக்கள் மூலமாகவும் வெளிவந்து அனைவருக்கும் கலக்கத்தை தந்தது.

    எப்படி பார்த்தாலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.. எந்த அளவுக்கு பாதிப்பு என்று மொத்தமாக கணிக்க எப்படியும் 3, 4 நாட்கள் ஆகும் என்றார்கள்... மம்தா பானர்ஜி மாநில நிலைமையை கண்டு மனம் வருந்தினார்.. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த புயல் பாதிப்பை நேரில் வந்து பார்வையிடுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பேன் என்றும் சொன்னார்.

    இ.எம்.ஐ செலுத்த மேலும் 3 மாதம் காலக்கெடு.. ரெப்போ விகிதம் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்புகள்இ.எம்.ஐ செலுத்த மேலும் 3 மாதம் காலக்கெடு.. ரெப்போ விகிதம் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்புகள்

    அப்போதுதான், பிரதமர் நாளை தினம் அதாவது இன்று, புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.. முன்னதாக "மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் பாதித்த வீடியோ காட்சிகளை பார்த்தேன்... இந்த துயரமான நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் மேற்கு வங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது. புயலால் பாதித்தவர்கள் மீண்டு வருவதற்கு பிரார்த்திக்கிறேன்... இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.

    விமானத்தில் பறந்தபடியே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் இன்று பார்வையிட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களும் உறுதி செய்திருந்தன.. இந்நிலையில், பிரதமர் இன்று விமானத்தில் மேற்கு வங்கம் கிளம்பினார்.. 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி, முதல் முறையாக டெல்லியை விட்டு வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ளார்.

     cyclone amphan: pm modi to visit west bengal of damage caused by cyclone

    கொல்கத்தா ஏர்போர்ட்டில் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் ஹெலிகாப்டரில் பறந்தபடியே பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.. அவருடன் சேர்ந்து, மம்தா பானர்ஜியும் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி பஸிரத் பகுதியில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் மம்தா உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். "மேற்கு வங்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஏற்கனவே பிரதமர் உறுதி அளித்த நிலையில், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.

    இந்த ஆலோசனையை தொடர்ந்து பிரதமர் மோடி ஒடிசாவுக்கு செல்ல உள்ளார்.. மேற்கு வங்கம் போலவே ஒடிசாவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதால், அங்கு விமானம் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து பார்வையிட உள்ளார்.

    English summary
    cyclone amphan: pm modi to visit west bengal of damage caused by cyclone
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X