For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

174 கி.மீ. வேகத்தில் ஃபானி புயல்... ஆந்திரா துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒடிசாவில் இன்று கரையை கடக்கிறது ஃபானி புயல்.. வீடியோ

    விசாகப்பட்டினம்: மிக அதி தீவிர ஃபானி புயல் ஒடிசாவின் கோபால்பூர் - சந்தபாலி இடையே கரையை கடக்கத் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூரி நகருக்கு தென்மேற்கு பகுதியில் இருந்த ஃபானி புயல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

    ஃபானி புயல் கரையை கடக்கத் தொடங்கியதால் ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    Cyclone Fani Andhra Pradesh: Srikakulam as rain and strong winds hit the region

    8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ஃபானி புயலின் தாக்கம் காலை 11 மணி வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே நேரம், புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சாலை, ரயில், மற்றும் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஃபானி புயல் கரையை கடப்பதால் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியான ஸ்ரீகாகுளத்தில் ஃபானி புயலால் பலத்த காற்று வீசி வருகிறது.

    இதே போல், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையே, ஃபானி புயல் அபாயத்தில் உள்ள மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுக்கு உதவ அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Cyclone Fani Warning Center, Visakhapatnam (Andhra Pradesh): Local cautionary signal no. 3 kept hoisted at Machilipatnam, Krishnapatnam, Nizamapatnam, Kakinada & Vadarevu ports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X