For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை குஜராத்தை தாக்கப்போகும் வாயு புயல்.. 3லட்சம் மக்கள் வெளியேற்றம்.. 'மிக கனமழை' எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Vayu: வாயு புயல்.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை..சென்னைக்கு எப்படி?- வீடியோ

    அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நாளை வாயு புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக கண்ட்லா துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் யாரும் வரும் ஜுன் 15ம் தேதி வரை கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென்மேற்கு பருவ மழை காரணமாக அரபிக்கடலில் உருவான வாயு புயல் நாளை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மாகுவா பகுதியில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வோரா மற்றும் டியூ இடையே உள்ள பகுதியில் வாயு புயலின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாயு புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் சாதாரண வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. விவசாய பயிர்களும், சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

    புஸ்ஸுன்னு போன வெறும் புஸ்ஸுன்னு போன வெறும் "வாயு".. இந்த 4 மாவட்டத்தில் மட்டும் செம மழை இருக்கு!

     தேசிய பேரிடர் மீட்பு படை

    தேசிய பேரிடர் மீட்பு படை

    இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு மீட்பு பணிக்காக சென்றுள்ளனர். இத்துடன் கடற்படை மற்றும் விமானப்படையினரும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

     700 தற்காலிக முகாம்கள்

    700 தற்காலிக முகாம்கள்

    புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்க தற்காலிகமாக 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்காக உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் குஜராத்தில் 700 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

     குஜராத் முதல்வர் வேண்டுகோள்

    குஜராத் முதல்வர் வேண்டுகோள்

    அதீதீவிரமான இந்த புயல் காரணமாக பலத்த காற்றுடன் மிக கனமழையும் குஜராத்தில் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி, தவார்கா, சோம்நாத், சாசன் மற்றும் கட்ச் பகுதிகளில் சுற்றுலா சென்ற மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்த்தியுள்ளார். சுற்றுலா சென்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற அரசு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

     ராகுல்காந்தி வேண்டுகோள்

    ராகுல்காந்தி வேண்டுகோள்

    இந்த வாயு புயல் காரணமக கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் மீட்பு பணி உள்ளிட்ட உதவிகளில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    Cyclone Vayu is very likely to cross Gujarat coast between Porbandar and Mahuva as a very severe cyclonic storm tomorrow morning
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X