For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை டப்பாவாலாக்கள் உட்பட, ஹனுமந்தப்பா உயிர் பிழைக்க நாடு முழுவதும் பிரார்த்தனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, உயிர் பிழைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் இணைந்து பிரார்த்தனைகள் நடத்தி வருகிறார்கள்.

சியாச்சின் மலையி்ல ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பத்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, 6 நாட்கள் கழிந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மெட்ராஜ் ரெஜிமண்ட் வீரர் ஹனுமந்தப்பா உயிரோடு மீட்கப்பட்டார்.

25 அடி ஆழ பனிக்குள் சிக்கியபடி ஹனுமந்தப்பா 6 நாட்களாக உயிரோடு இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இத்தகவல் அறிந்து அவரது குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் டெல்லியில் ஹனுமந்தப்பா சிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

சிகிச்சை

சிகிச்சை

ஹனுமந்தப்பா, ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டவில்லையாம். எனவே நாடு முழுவதும் அவர் நலம் பெற பிரார்த்தனைகள் நடக்கின்றன.

காசியில் யாகம்

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் (காசி), பொதுமக்கள் இணைந்து யாகம் நடத்தி ஹனுமந்தப்பாவுக்காக வேண்டினர். ஹனுமந்தப்பாவின் புகைப்படங்களையும் அவர்கள் கைகளில் வைத்திருந்தனர்.

யூத் காங்கிரஸ்

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், இளைஞர் காங்கிரசார், ஹனுமந்தப்பா போட்டோக்களை கைகளில் ஏந்தியபடி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

டப்பாவாலாக்கள் பாசம்

மும்பையில் அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்துச் சென்று சப்ளை செய்யும், டப்பாவாலாக்கள், தங்கள் பணிக்கு நடுவே, ஹனுமந்தப்பா நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

English summary
Nation including Dabbawalas of Mumbai pray for long life of Lance Naik Hanamanthappa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X