For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பருப்பு விலை சர்ர்ரர்ர்.. இது தான் நீங்க சொன்ன நல்ல நாளா மோடிஜி?: ராகுல் காந்தி

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: பருப்பு விலை அதிகரித்துள்ளதால் பிரதமர் மோடி விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பருப்பு சாப்பிடுகிறார் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள அரேராஜ் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பருப்பு விலை உயர்ந்துள்ளதை பற்றி பேசினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

பருப்பு

பருப்பு

சப்பாத்தி தால்(பருப்பு) சாப்பிடாதீர்கள், இறைவன் அருட்கொடையில் கிடைக்கும் பிறவற்றை சாப்பிடுங்கள் என்று மோடிஜியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் மக்களிடம் கூறி வருகிறார்கள்.

மோடி

மோடி

மக்களை தால் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டு மோடி மட்டும் விமானம் ஏறி அமெரிக்கா, இங்கிலாந்துக்கு சென்று அங்கு தால் சாப்பிடுகிறார். நல்ல ஆடைகள் அணிந்து வெளிநாடுகளுக்கு செல்ல நேரம் இருக்கிறது. ஆனால் உள்நாட்டில் உள்ள விவசாயிகள், தலித்துகளை சந்திக்க அவருக்கு நேரம் இல்லை.

பணம்

பணம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடிமக்களின் வங்கி கணக்குகளிலும் பணம் செலுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தாரே மோடி, நிறைவேற்றினாரா?. யார் வங்கிக் கணக்கிலாவது பணம் செலுத்தப்பட்டுள்ளதா?

விலை உயர்வு

விலை உயர்வு

நல்ல நாள் வரும், விலைவாசி குறையும் என்றார் மோடி. ஆனால் இன்று ஒரு கிலோ பருப்பு ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மோடியோ இது குறித்து எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார்.

பொய்

பொய்

இந்திய மக்கள் தெளிவானவர்கள் என்பதை மோடி தற்போது தான் உணர ஆரம்பித்துள்ளார். மோடிஜி பொய் சொல்வதை நிறுத்திக் கொண்டு, வேலையை துவங்குங்கள் என்றார் ராகுல்.

English summary
Congress vice president Rahul Gandhi told that as dal price has increased in India, PM Modi is going abroad and eats dal there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X