For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சல பிரதேசம் செல்கிறார் தலாய்லாமா.. சீன எல்லையில் பதற்றத்திற்கு வாய்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

இடாநகர்: திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தையும் உரிமை கொண்டாடி வருகிறது.

Dalai Lama’s proposed Arunachal Pradesh visit may irk China

திபெத்தை சீனா ஆக்கிரமித்ததால் 1959ம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவுக்கு வந்துவிட்டார். அது முதலே, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் சீனா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அருணாசல பிரதேசத்திற்கு தலாய் லாமா செல்வது பதற்றத்தை அதிகரிக்கும் என தெரிகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ராகுல் வர்மா சில நாட்கள் முன்பு, அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அழைப்பின் பேரில், அடுத்த மாதம் அங்கு செல்லும் தலாய் லாமா, புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

English summary
The Dalai Lama seems set to visit India’s northeastern state of Arunachal Pradesh next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X