For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிப்படை வசதிகள் இல்லை.. மாண்டியாவில் தேர்தலை புறக்கணித்த தலித்துகள்

அடிப்படை வசதிகள் செய்து தராததால் மாண்டியாவில் தலித்துகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மாண்டியா: அடிப்படை வசதிகள் செய்து தராததால் மாண்டியாவில் தலித்துகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. கர்நாட மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயநகர் தொகுதி பாஜ வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் மற்றும் ஆர்.ஆர்.நகரில் வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்ததாலும் இந்த 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகா தேர்தல்

எனவே 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடக்கிறது. பாஜ-223, காங்கிரஸ்-222, மஜத- 201, அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி-18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு

இந்நிலையில் மாண்டியாவில் தலித்துகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்துதராததால் மாண்டியா மாவட்டத்தின் மதூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஹேமனஹல்லி பகுதியில் தலித்துகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

300 பேர் தலித்

300 பேர் தலித்

இந்த பகுதியில் 1000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 300 பேர் தலித்துகள் உள்ளனர். தங்களின் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வீட்டுவசதி திட்டங்கள்

வீட்டுவசதி திட்டங்கள்

முறையான குடிநீர், வடிகால், தெரு விளக்குகள், சாலைகள் போன்றவை இல்லை. பல வீடுகள், வீட்டுவசதி திட்டங்கள் மற்றும் பல்வேறு மேம்பாட்டு நிறுவனங்களின் கடன்கள் ஆகியவற்றை அடைக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தலித்துகள் குற்றச்சாட்டு

தலித்துகள் குற்றச்சாட்டு

தங்களின் காலனியை முன்னேற்றுவதற்கான வேண்டுகோள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன தலித்துகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தலித் அல்லாதவர்கள்

தலித் அல்லாதவர்கள்

வாக்குப்பதிவை புறக்கணித்த முடிவைத் தொடர்ந்து, கிராம அலுவலர்கள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தலித் அல்லாதவர்கள் தங்களது வாக்குகளை தாக்கல் செய்கின்றனர்.

English summary
The poor infrastructure facilities at their colony has prompted Dalits at Hemmanahalli of Maddur taluk, Mandya district, to stay away from voting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X