அழகு நீ நடந்தால் நடையழகு பாடலில் வரும் டிராபிக் போலீஸை நினைவுப்படுத்தும் இந்தூர் சுபி ஜெயின்!
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனமாடி போக்குவரத்தை சீரமைக்கிறார் கல்லூரி பெண் ஒருவர்.
புனேவில் உள்ள சிம்பயாசிஸ் கல்லூரியில் படித்து வருகிறார் சுபி ஜெயின். 23 வயதான சுபி ஜெயின், இந்தூரில் நடனம் மூலம் போக்குவரத்தை சீரமைத்து வருகிறார்.

போக்குவரத்தை சரி செய்வதோடு போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்துகிறார்.
அத்துடன் கார் ஓட்டுநர்களை சீட் பெல்ட் போட்டுக் கொண்டு ஓட்டுமாறு அறிவுறுத்துகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவோர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பெண்ணை பார்ப்பதற்கு பாட்ஷா படத்தில் அழகு நீ நடந்தால் நடையழகு பாடலில் வரும் போக்குவரத்து காவலரை நினைவூட்டுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சித் சிங் என்ற போக்குவரத்து காவலர் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடி டிராபிக்கை சரி செய்தது நினைவுக்கூரத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!